கதிகலங்கும் விழுப்புரம்... களத்தில் ரவுண்டு கட்டும் கலெக்டர்... என்ன நடந்தது தெரியுமா ?
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையினை உருவாக்கிடும் வகையில், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நேமூர் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி காணவும், மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், எல்லோருக்கும் எல்லாம் என்கிற உயர்ந்த எண்ணத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வாயிலாக அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுத்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், விக்கிரவாண்டி வட்டம், நேமூர் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பல்வேறு துறைகள் சார்பில், 487 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தாட்கோ சார்பில், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டம் மற்றும் பி.எம்.அஜய் திட்டத்தின்கீழ், 09 பயனாளிகளுக்கு ரூ.3327995/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 05 பயனாளிகளுக்கு ரூ.31795/-மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பி.எம்.ஜன்மன் திட்டத்தின்கீழ், 7 பயனாளிகளுக்கு ரூ.3549000/-மதிப்பீட்டில் வீடுகாள் கட்டுவதற்கான ஆணைகளும், வருவாய்த்துறை சார்பில், 55 பயனாளிகளுக்கு ரூ.4861160/- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் இ-பட்டாவிற்கான ஆணைகளும்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 150 பயனாளிகளுக்கு ரூ.3076500/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், குடிமைப்பொருள் பிரிவின் கீழ், 70 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 16 பயனாளிகளுக்கு ரூ.116480/-மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 09 பயனாளிகளுக்கு ரூ.58968/- மதிப்பீட்டில் சலவைப்பெட்களும், விக்கிரவாண்டி தோட்டக்கலைத்துறை சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.170560/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், காணை ஒன்றியம் தோட்டக்கலைத்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.100000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், விக்கிரவாளர்டி ஒன்றியம் வேளாண்மைத்துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு ரூ.29504/ மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களும், காணை ஒன்றியம் வேளாண்மைத்துறை சார்பில், 04 பயனாளிகளுக்கு ரூ.12000/- மதிப்பீட்டில் விசைத்தெளிப்பான் கருவிகளும், வருவாய்த்துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை (ச.பா.தி) சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.171000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், முன்னோடி வங்கி சார்பில், 04 பயனாளிகளுக்கு ரூ.1715000/-மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 95 பயனாளிகளுக்கு ரூ.5353450/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 8 பயனாளிகளுக்கு ரூ.400000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 487 பயனாளிகளுக்கு ரூ.2,29,73,412/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”
முதலமைச்சர் மக்களின் வசிப்பிடத்திற்கே அரசு அலுவவர்கள் மக்களைத் நாடிச்சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்திடும் யாகயிலும், வழங்கப்படும் கோரிக்கை மனுவிற்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையிலேயே மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமும், தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமும் செயல்படுத்தப்பட்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களுக்கு கிடைக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், விக்கிரவாண்டி வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், பல்வேறு துறை சார்ந்த அலுவமர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் வருகை புரிந்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம், கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீவு காணிபதற்கு துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுமட்டுமல்லாமல், மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பல்வேறு நுறை சார்பாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து கண்காட்சியும், திட்டங்கள் தொடர்பான விவரங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்வதோடு, இதுதொடர்பான மற்றவர்களுக்கு ஏற்படுத்தி பயனடையும் வகையில் உறுதுணையாக இருத்திட வேண்டும்.
கடைகளில் திடீர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையினை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையினை தடை செய்து வருகிறார்கள், அந்த வகையில், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு வருகை புரிந்துள்ள பொதுமக்கள் அனைவரும் போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்துகொளிவதோடு, போதைப்பொருள் விற்பனையினை முற்றிலுமாக ஒழிப்பதற்கு முழுஒத்துழைப்பு வழங்குவதோடு, தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்களிடம் போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.





















