மேலும் அறிய

ஜெயலலிதா படத்திற்கு செருப்பு மாலை போட்டவர் தான் ஓபிஎஸ் - சி.வி.சண்முகம்

தனக்கு முதல்வர் பதவி இல்லை என்பதற்காக, உன்னை முதல்வராக்கிய சசிகலா மீது ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக கொலை வழக்கு சுமத்தியவர் தான் ஓ.பி.எஸ்

ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு நடிப்பதாகவும், முதலமைச்சர் பதவி இல்லை என்றபோது சசிகலா மீது கொலை பழி போட்டவர்தான் பன்னீர் செல்வம் என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தொடங்கப்பட்டு 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு  மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசியதாவது: திமுக இயக்கம் என்ற தீய சக்தியை விரட்டி அடிக்கபட வேண்டுமென்று தொடங்கப்பட்ட இயக்கமாக அதிமுக தற்போது 51 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இதில் 32 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் ஆட்சி புரிந்த இயக்கமாக இருந்துள்ளது.

இன்றைக்கு யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நான் தான் தலைவர் என கூறிக்கொள்ளலாம் சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கலாம் அப்படி கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் சாதிக்க முடியவில்லை. நடிகர்களுக்கு ரசிகர் உண்டு அவர்களை மக்கள் தலைவராக ஏற்று கொள்ளமாட்டார்கள். அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுகொள்ளப்பட்ட தலைவர் தான் எம்ஜி ராமச்சந்திரன் எந்த அளவிற்கு சாதனைகளை அதிமுக பார்த்திருந்தாலும் சோதனைகளையும் பார்த்த இயக்கமாகயுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத தலைவராக உள்ளதால் தான் கருணாநிதி இறப்பு வரை ஸ்டாலினை ஏன் தலைவராக்கவில்லை என்பது புரிகிறதா என கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி சுய நினைவு இழந்த பிறகு தான் ஸ்டாலினுக்கு பதவி வழங்கபட்டுள்ளதாகவும், தன்னை கைது செய்துவிட்டு தான் தூங்குவார் என கூறும் விழுப்புரத்தில் உள்ள காவல் துறை அதிகாரி அப்படியென்றால் தாளாரமாக தன்னை கைது செய்து கொள்ளுங்கள் அப்படியாவது அந்த அதிகாரி நிம்மதியா தூங்கட்டும் என சிவி சண்முகம் தெரிவித்தார்.  எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என கூறியவர்கள் மத்தியில் நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் முதல்வர் என பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி கொரனாவை சிறப்பாக கையாண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி என மத்திய அரசு அறிவித்தத நிலையில் ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் தான் ஆகிறது ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விலையேற்றம் அதிகரித்து காய்கறி முதல் கட்டுமான பொருட்கள் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறினார்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிமெண்ட் விலை அதிகரிக்கும் ஏனென்றால் கருணாநிதியின் குடும்பத்தாரின் பினாமிகள் கையில் சிமெண்ட் கம்பெணிகள் உள்ளதால் தான் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என தெரிவித்தார். ஆளத்தெரியாத முதல்வரக தமிழக முதல்வர் உள்ளதால் செயல்படாத தமிழக அரசாக  உள்ளதால் மருந்துகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் காய்ச்சலுக்கு வழங்குகிற மாத்திரைகள் கூட இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளதாக கூறினார். சுகாதார துறையை கவனிக்காமல் எப்பொழுதும் தன் உடம்பை காக்க மாரத்தான் ஓடிகிற சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணி உள்ளதாகவும் மருந்து கொள்முதல் செய்கின்ற டெண்டரை முடிவு செய்யாததால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையே தமிழக அரசு கலைக்கபார்ப்பதாக குற்றச்சாட்டினார்.

தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளார்கள் டம்பி முதல்வராக ஸ்டாலினும், சினிமா துறையில் முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்கிற முதல்வராக மருமகன் சபரீசனும் மூவரை கட்டுபடுத்துகிற முதல்வராக ஸ்டாலினின் துணைவியார் உள்ளதாக தெரிவித்தார். மேலும் டம்மி முதல்வரை மூன்று ஐ ஏ எஸ் அதிகாரிகள் கட்டுபடுத்துவதாகவும் இந்து மதத்தினை பற்றி தவறான பேசினால் இந்து சமயநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு காது கேட்காது என்று தெரிவித்தார். மருந்து மாத்திரை வாங்கி தர இயலாத முதல்வராக ஸ்டாலின் உள்ளதாகவும் தமிழக மக்கள் ஏன் டா திமுகவிற்கு வாக்களித்தோம் என்று வேதனை பட்டு கொண்டிருப்பதாகவும், குறுகிய காலத்தில் மக்கள் வெறுப்பினை பெற்றவராக ஸ்டாலின் உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மின்சார கட்டனம் சொத்து வரியை உயர்த்தாதே என கூறிவிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பொறுபேற்றவுடன் மின்சாரம்,சொத்து வரி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும் நவீன முறையில் கொள்ளை அடிப்பதில் திமுகவினரை விட வேறு யாராலும் முடியாது என்றும் திமுக தொண்டர்களே இந்த ஆட்சி எதுக்குடா என்று கேள்வி நிலைமை உருவாகி உள்ளதாக கூறினார்.

பஞ்சாயத்தில் உள்ள பணத்தை அனைத்தையும் திமுக எடுத்துகொண்டு கமிஷன் பேசி விற்றுவிட்டார்கள். ஊரக உள்ளாட்சி குழு அமைப்பிற்கு 2 ஜி புகழ் கனிமொழி தலைவராக உள்ளது  திருடன் கையில் சாவியை கொடுத்தது போல் இருப்பதாகவும், டெல்லியில் மறைமுக கள்ள உறவை வைத்துகொண்டு பதவியை கனிமொழிக்கு வாங்கி கொடுத்தது தான் திமுக அரசு குற்றஞ்சாட்டினார். முதல் கையெழுத்தாக நீட்டை ரத்து செய்வேன் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்று 16 மாதகாலம் ஆகியும் செய்யவில்லை நீட் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரனைக்கு வந்தபோது அந்த வழக்கினை தற்போது விசாரனை செய்ய வேண்டாம் தமிழக முதல்வர் கையெழுத்து கடிதம் வழங்கியதால் வழக்கு விசாரனை ஜனவரிக்கு தள்ளி போய் உள்ளதாகவும் அதிமுக சின்னம்முடக்கப்பட்டு மீண்டும் மீண்டெழுத்த இயக்கமாக அதிமுக உள்ள நிலையில் தமிழகத்தில் 234 தொகுதியிலும் கூட்டத்தை நடத்தியுள்ளோம் தொண்டர்கள் படை இருந்தால் ஒரு கூட்டத்தை நடத்தி காட்ட முடியுமா என ஓ. பன்னீர் செல்வத்து சிவி சண்முகம் சவால் விடுத்தார்.

ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் தான் ஓ. பன்னீர்செல்வம் இன்றைக்கு நடிக்கிறார். முதலமைச்சர் பதவி இல்லை என்றபோது சசிகலா மீது கொலை பழி போட்டவர்தான் ஓ. பன்னீர் செல்வம் சசிகலா குடும்பம் கழகத்தில் இணைய கூடாது என்றவர் தான் ஓ பி எஸ். அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர் தான் ஓ பி எஸ் துரோகம் இழைத்தவர்கள் நல்லா இருந்தததாக  சரித்திரம் இல்லை. ஆளத்தெரியாத தகுதியற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாக கூறினார்.

திமுக கட்சியிலேயே டம்பி பீசாக பொன்முடி உள்ளதாகவும் மூத்த நிர்வாகிகளுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றும் கொள்ளை அடித்து கொடுப்பவர்கள்,கமிஷன் கொடுப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. விடிவு காலம் விரைவில் வர உள்ளது.. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வர்க்கூடும் என்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறியது போல் எப்போது தனது பதவி பறிபோகும் என்ற பயத்துடன் ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Embed widget