10.5 Reservation: 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்... மணமேடையில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய மணமக்கள்!
விழுப்புரம் : 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி மணமேடையில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய மணமக்கள்.
![10.5 Reservation: 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்... மணமேடையில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய மணமக்கள்! Villupuram Brides written to CM mkstalin at marriage demanding for 10.5 reservation for vanniyar 10.5 Reservation: 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்... மணமேடையில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய மணமக்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/23/5441fa10ad7e1315ed0da568e4b3bf521682239600623194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி மணமேடையில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய மணமக்கள். வன்னியர்களுக்கு 10.5 சதவித இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடிதம் அனுப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளராக இருப்பவர் பொறியாளர் மதன். இவருக்கு இன்று விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
வி.மதன் - தீபிகா இவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்ட விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி ஒரு தபால் பரிசுபெட்டியை பரிசளித்தார். அதனுடன் முதல்வருக்கும், நீதியரசருக்கும் வன்னியர்களுக்கான 10.5% தனி இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்த கோரிய கடிதங்களையும் வழங்கினார். பின்னர் மணமக்கள் கடிதத்தை விண்ணப்பித்து பரிசுபெட்டியில் போடும்படி செய்து, அதை சேகரித்து விழுப்புரம் அஞ்சல் பெட்டிக்கு கொண்டு சேர்த்து, கடிதத்தை முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு அனுப்பி ஒரு புதுவிதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். விழாவில் உடன் பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)