புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் - நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
எதிர்பாராமல் நீச்சல் குளத்தில் விழுந்த சஹானாவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாகனம் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
![புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் - நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு Villupuram 6 year old child falls and dies in swimming pool Tragedy in New Year celebration TNN புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் - நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/02/8d0926f7b9ccf7ee613220b3041548961664706298479235_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புத்தாண்டு கொண்டாட வந்த சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர் தனியார் ரிசாட்டில் தங்கி இருந்த பொழுது அவர்களது 6 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது குடும்பம் உள்ளிட்ட இவரது நண்பர்கள் குடும்பத்தினர் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆரோவில் அருகே உள்ள பூத்துறையில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு நேற்று வந்தனர். அங்கு தங்கியவர்கள் சந்தோஷமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு பரந்தாமனின் ஆறு வயது பெண் குழந்தை சஹானா அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தது.
எதிர்பாராமல் நீச்சல் குளத்தில் விழுந்த சஹானாவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாகனம் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறு வயது பெண் குழந்தை சஹானா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலின் பெயரில் ஆரோவில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அந்த ரிசார்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுவை வந்த குடும்பத்தினர் குழந்தையை இழந்த சம்பவம் அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)