மேலும் அறிய

ஆட்சியர் அலுவலகத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி... தொழிலாளர்களை ஏமாற்றியதாக ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மீது புகார்

ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் நிலத்தில் கிணறு வெட்டியதற்கான தொகையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை. 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

விழுப்புரம்: ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் நிலத்தில் கிணறு வெட்டியதற்கான தொகையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கிணறு ஆழப்படுத்தும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களை கடந்த சில வாரத்திற்கு முன்பு, விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கநாதன் என்பவர் தொடர்புகொண்டு மேலக்கொந்தை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டுவதற்கு பணி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கிணறு வெட்டுவதற்கு ஒரு கனஅடிக்கு ரூ.40 என்று பேசியுள்ளார். அதற்கு அந்த தொழிலாளர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 20-ந் தேதி முதல் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 50 தொழிலாளர்கள், கிணறு வெட்டும் பணியை தொடங்கினர்.

ஒரு வார காலத்தில் பணியை முடித்த நிலையில், 91,532 கனஅடிக்குரிய தொகையை கூலியாக தரும்படி அந்த தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், தர மறுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து 27-ந் தேதியன்று விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பிறகு அந்த கிணறை பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்து அதன் அறிக்கையை காவல்துறையிடம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கூலித்தொகையை கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு தர வேண்டிய தொகையை விரைந்து பெற்றுத்தருமாறு அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் அவர்களில் பாபு மனைவி புஷ்பாஞ்சலி (வயது 35), மாரி மனைவி லட்சுமி (55) உள்ளிட்ட 6 பேர் தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்கள் மீது முன்னெச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியதற்கான உரிய தொகையை தரும்படி கேட்டதற்கு அவர் தர மறுத்து ஆணவத்தோடும், அதிகாரத்துடனும் பேசுகிறார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரம், அரசியல் துஷ்பிரயோகம் செய்து அவர் விசாரணையை தாமதப்படுத்துகிறார். இதனால் நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் உணவுக்கே வழியின்றி மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே எங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத்தர உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Embed widget