மேலும் அறிய

தென்பெண்ணையாற்றில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது

விழுப்புரம் அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி, கருப்புநிற ஈமத்தாழி பானை ஓடுகள் என நான்கு வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பிரதாப், சாமுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் கரைபகுதியில் பெருங்கற்காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழி, கருப்புநிற ஈமத்தாழி பானை ஓடுகள் என நான்கு வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். இந்த முதுமக்கள் தாழிக்கு ஈமப்பேழை மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. முதுமக்கள் தாழி 1/2 அடி முதல் 7அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன. முதுமக்கள் தாழி முறையைப் பொறுத்தவரை 3 விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஒன்று தாழியில் இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது.

இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாட்கள் விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைப்பதாகும். மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப் புதைக்கும் முறையாகும். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம். அரிக்கமேடு, மாங்குடி, பல்லாவரம், திருக்கழுகுன்றம் போன்ற இடங்களில் தொல்லியல் துறை ஆய்வுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழர்கள் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் உடலை சம்மண மிட்டு அமரவைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை, அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget