சமூக நீதி குறித்து ராமதாஸ் மோடியிடம் தான் பேச வேண்டும் - அமைச்சர் பொன்முடி
அதிமுகவில் உள்ளவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள், சமூக நீதி பற்றி பேசு பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு பேசுகிறார்.
விழுப்புரம்: சமூக நீதி பற்றி பேசு பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு அதனை பேசுவதாகவும் சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவிற்குதான் தகுதி உண்டு, சமூக நீதி குறித்து பேசும் ராமதாஸ் மோடியிடம் தான் அதனை பேச வேண்டுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள கொசப்பாளையம் கிராமத்திலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, எம்பி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, திமுகவை பார்த்து பயந்தே போட்டியிடாமல் அதிமுக சென்றுவிட்டதாகவும், அதிமுகவில் உள்ளவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள், சமூக நீதி பற்றி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு பேசுகிறார். சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி உண்டு சமூக நீதி குறித்து ராமதாஸ் மோடியிடம் தான் பேச வேண்டும் என கூறினார். திமுக மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கினைத்து செயல்படுத்துகிற கட்சிகள் இங்கு இல்லை என்றும் சமூக நீதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதால் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார்.
"முதலமைச்சர் முன்னிலையில் தங்க சங்கிலி" - எ.வ. வேலு
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திமுகவில் கடந்த 26 ஆண்டுகளாக மாவட்ட கழக செயலாளராக தான் உள்ளதாகவும் இந்த பதவி எனக்கு வேண்டாம் என்ன விட்டுடா கூட போதும் பராவில்லை என்றும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பாக்கெட்டில் நான்கு அமைச்சர்கள் உள்ளதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னரே வேட்பாளர் அன்னியூர் சிவா அமைச்சரான தன்னிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். அமைச்சர் நேரு, பன்னீர்செல்வம், வேலுவாகிய நான் என்னையும் வேட்பாளர் அன்னியூர் சிவா பாக்கெட்டில் வைத்துள்ளதாகவும் அன்னியூர் சிவா வெற்றி பெற்றவுடன் அவரது முதல் கோரிக்கையான சாலையை அமைத்து தருவேன் என உறுதியளித்தார்.
தேர்தலில் தின்னை பிரச்சாரம் தான் கை கொடுத்துள்ளதாகவும், முதலமைச்சரின் சாதனைகளை தின்னை பிரச்சாரம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் புல்லு பூண்டு கூட முளைக்கலாம் பாஜக முளைத்துவிட்டால் பாசிசம் வளர்ந்து விடும் என்றும் அதிமுக நமக்கு எதிரி அல்ல அவர்கள் போட்டியிடவில்லை என கூறினார். மேலும் புதியதலைமுறை ஆசிரியர் பாராளுமன்ற தேர்தலில் கேட்ட கேள்வியை குறிப்பிட்டு ஆன்மிக சிந்தனை உள்ள பூமி திருவண்ணாமலை என்றாலும் பெரியார் சிந்தனையில் வளர்ந்தவன் எ.வ. வேலு என்றும் ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்து பார்க்க முடியாது என தெரிவித்தார்.
தமிழகத்தில் 37 சதவிகிதம் உள்ள வன்னிய மக்கள் உள்ள நிலையில் 10.5 சதவிகிதத்தில் ஒடுக்கப்பார்பதாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட 7 வாக்கு சாவடிகளில் முகவர்களாக உள்ளவர்கள் யார் அதிக வாக்குகள் பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் தங்க சங்கிலி பெற்று தருவேன் என அமைச்சர் எ.வ. வேலு உறுதியளித்தார்.