Udhayanidhi stalin : துணை முதல்வராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின் ! எங்கு ? எப்போது தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின் வெகு விரைவில் தமிழக துணை முதல்வராக பதவியேற்க உள்ளார், பெரியார் அண்ணா, கொள்கையிலையே வளர்ந்துள்ளார் - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: தமிழகத்தை வழிநடத்த கூட இளைஞர் உதயநிதி ஸ்டாலின் வெகு விரைவில் தமிழக துணை முதல்வராக பதவியேற்க உள்ளதால் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாட வேண்டுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுப்பது பற்றி பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ தி.மு.க. சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. உத்தரவு மட்டுமே இன்னும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று கலைஞர் கருனாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர் பொன்கௌதமசிகாமணி தலைமையில் விழுப்புரம் அருகேயுள்ள செம்மார் , ஏனாதிமங்கலம், ஏமப்பூர் ஆகிய ஊராட்சிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு திமுக கட்சியை ஏற்றி வைத்து கழக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். ஏனாதிமங்கலத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து,
கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி தமிழகத்தை வழிநடத்த கூட இளைஞர் உதயநிதி ஸ்டாலின் வெகு விரைவில் தமிழக துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும், இளைஞர்களை வழிநடத்த கூடிய ஆற்றல் கொண்டவராகவும், பெரியார் அண்ணா, கொள்கையிலையே வளர்ந்ததாக தெரிவித்தார். பவள விழா கொண்டாடுகிற வேளையில் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதால் அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாட வேண்டும் என கூறினார்.