மேலும் அறிய

TVK Manadu: தவெக மாநாட்டிற்கு போலீஸ் விதித்த 33 நிபந்தனைகள்... என்னென்ன தெரியுமா?

50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று பதில் சொல்வீர்கள் இதற்கு என்ன காரணம்?, 50 ஆயிரம் பேர் அளவுக்கு தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் - காவல் துறை

விழுப்புரம்: தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு அனுமதி கொடுத்து விதிக்கப்பட்டுள்ள 33 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் மேடை மாநாடு இடம், தேசிய நெடுஞ்சாலை பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்கள் கொடுக்க வேண்டும், அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் 1.50 லட்சம் பேர் வருவார்கள் என குறிப்பிட்டுவிட்டு தற்போது கேட்கப்பட்ட 21 கேள்வியில் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று பதில் சொல்வீர்கள் இதற்கு என்ன காரணம்?, 50 ஆயிரம் பேர் அளவுக்கு தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும்,

மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளே உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும்,

அனைவருக்கும் குடிநீர் ,உணவு ஏற்பாடு செய்ய வேண்டும், மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் கொடுக்கப்பட்ட வாகனங்களில் எண்ணிக்கை 20 ஆயிரம் பேர் தான் அந்த வாகனங்களில் வர முடியும் இதற்கு ஏன் இப்படி கொடுத்துள்ளீர்கள்,

மாநாட்டிற்கு செல்லும் வழிகள் குண்டும்குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநாட்டு பரப்பளவு 85 ஏக்கர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் மாநாட்டு மேடை, மற்றும் மாநாட்டு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும்,

பார்க்கிங் இடத்திற்கும் மேடை மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும், கர்ப்பிணி பெண்கள் முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,

விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில் ரோடு மற்றும் 6 கிணறுகள் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும், 

தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதனால் அவசரத்தில் பலர் இந்த சாலையை கடந்து செல்வார்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும், 

பார்க்கிங் வசதியிலிருந்து மக்கள் மாநாட்டு இடத்திற்கு வருவதற்கு பாதுகாப்பிற்கு, தன்னார்வளரை கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், 

கொடி அலங்கார, வளைவால், பேனர் போன்ற கட்டுவதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்,

அடிப்படை வசதிகளை மாநாட்டு வருபவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும், 

மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்,

பொதுப்பணித்துறை பொறியாளரிடம் மேடையின் உறுதி தன்மையை பெற வேண்டும்,

மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும், கூம்பு ஒலிபெருக்கி, வானவேடிக்கையை கூடாது, மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜயுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது அந்த விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்,

மக்கள் கூட்டம் வருவதால் ஆங்காங்கே அவர்கள் எளிதில் காணும் வகையில் எல்இடி அமைக்க வேண்டும், மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி அதனை கண்காணிக்கவும் வேண்டும், 

தீயணைப்பு மருத்துவம் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு அனுமதி பெற்று நிறுத்த வேண்டும்,

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாநாட்டில் இருந்து வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனை 33 நிபந்தனைகளை வழங்கி காவல்துறை மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
MK Stalin Vs BJP ADMK: “ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி“; பாஜக, அதிமுகவை பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
“ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி“; பாஜக, அதிமுகவை பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
IND vs USA: ஆரம்பமே அதிர்ச்சி தந்த அமெரிக்கா! இமாலய இலக்கை குவிக்குமா இந்தியா?
IND vs USA: ஆரம்பமே அதிர்ச்சி தந்த அமெரிக்கா! இமாலய இலக்கை குவிக்குமா இந்தியா?
Congress: திமுக இல்லனா காங்கிரஸ் அவ்ளோதானா? தேர்தல் வரலாறுகள் சொல்வது என்ன? முழு அலசல்
Congress: திமுக இல்லனா காங்கிரஸ் அவ்ளோதானா? தேர்தல் வரலாறுகள் சொல்வது என்ன? முழு அலசல்
TTV vs Sasikala: சித்திக்கு எதிராக சீறும் டிடிவி.! சசிகலாவுடன் என்ன தான் பிரச்னை- ஓ...இது தான் காரணமா.?
சித்திக்கு எதிராக சீறும் டிடிவி.! சசிகலாவுடன் என்ன தான் பிரச்னை- ஓ...இது தான் காரணமா.?
Embed widget