மேலும் அறிய
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி; ட்விஸ்ட் வைத்த வேல்முருகன்
அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமியின் நணபர்கள் உறவினர்கள் அனைவரும் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது - வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
Source : ABP NADU
விழுப்புரம்: இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. கச்சத்தீவு கொடுத்ததில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது என செல்லப்பருந்ததை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும் விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன்...
திருச்சியில் வெளிநாடு செல்பவர்களுக்கான உடல் தகுதியில் மோசடி நடைபெறுகிறது. நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் தெரிவிக்கிறார்கள். மோசடியில் ஈடுபடும் நிறுவனம் மற்றும் இடைத்தார்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இறந்தவர்களை ஊர்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. இதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐஐடி இயக்குனரின் கருத்துக்கு பதில் அளித்த வேல்முருகன்:
அவர் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உத்தரபிரதேசத்தில் கோமியத்தையும், மாட்டு சாணத்தையும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள். அதற்கு முன்னோடியாக தமிழர்களையும் அப்படி கோமியம் குடித்த உயிர் வாழுங்கள் என்று கூறுகிறார். இது ஒரு கல்வியாளருக்கு அழகல்ல. இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஐஐடி பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி அறிவியலுக்கு புறம்பாக கருத்தை சொல்வதை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
கச்சத்தீவு கொடுத்ததை ராஜதந்திரம் என செல்வப்பெருந்தகை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வேல்முருகன்:
இதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது என செல்வப்பெருந்தகை கூற வேண்டும். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுகிறது. 36 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். செல்வப்பெருந்தகை இதற்கு பதில் சொல்ல வேண்டும். இந்திராகாந்தியின் ராஜதந்திரம் ஈழ மக்களுக்கோ, தமிழ்நாட்டு மீனவர்களுக்கோ என்ன நன்மை என செல்லப்பெருந்தகை விரிவான ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். பிறகு அது குறித்து கருத்து சொல்கிறேன்.
இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது
இன்று வரை திமுக கூட்டணியில்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. கூட்டணி குறித்து நான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதிக்கான திட்டங்களை நான் சட்டமன்றத்தில் குரல் உயர்த்தி கேட்கிறேன் அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பாசிச பாஜக அரசின் அடாவடி திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் எதிரான கூட்டணி. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தாது என அறிவித்துள்ள நிலையில் ஒரு பைசா நிதி தர மாட்டேன் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை எங்களுக்கு பிச்சையாக போடுகிறார்கள். மீதி 90% பணத்தை ஒன்றிய அரசு எடுத்துச் செல்கிறது. இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற பாசிச பாஜக என்ற கூட்டணி வரக்கூடாது.
அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக எடப்பாடி.பழனிசாமியின் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம். கோடநாடு வாழ்க்கை சிபிஐ விசாரிக்கும் என கூறுகிறார்கள். இது தான் இந்தியாவை ஆளும் கட்சியின் லட்சணமா.
தமிழ்நாட்டில் புயல்கள் வந்தது. ஆனால் தமிழ்நாடு கேட்ட ஆராயிரம் கோடியில் வெறும் 90 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நிதி இல்லாத காரணத்தினால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியவில்லை. தமிழ்நாட்டின் கடன் 8 ஆயிரத்து 34,000 லட்சம் கோடி கடன் உள்ளது.
தமிழக மக்களின் வரிப்பணத்தை மட்டும் தங்கள் கஜானுக்கு திருப்பிக் கொள்கிறது. மோடியும், நிர்மலா சீதாராமனும் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பாஜக அணியை வீழ்த்துவதற்காக மக்கள் உரிமைப் போராட்டத்தை தான் நடத்துகிறேன். கூட்டணிக்கும் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி செய்தியாளரிடம் கண்டிப்பாக கூறுவேன்.
இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு:
மதிப்பெண் போடுவதற்கு நான் ஐயா இல்லை என்றும். நான் பாமகவை தாண்டி வளர்ந்து விட்டேன். தமிழ்நாடு முழுக்க கொண்டாடும் ஒரு பொது தலைவராக வளர்ந்து விட்டேன். மீண்டும் என்னை என் பழைய இடத்திற்கு கொண்டு போய் நிறுத்துகிறீர்களா? என கேள்வி எழுப்பி விடைபெற்று சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion