மேலும் அறிய
Advertisement
தரமற்ற உணவகத்தில் அரசுப்பேருந்து நிறுத்தம் - பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்
ஆனால் தற்பொழுது கடலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த அதிரடி முடிவு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக அரசு போக்குவரத்து கழக தொலை தூர பேருந்துகள் பயணிகள் உணவருந்த உணவகங்களில் நிறுத்தும் பொழுது தரமற்ற உணவகங்களில் நிறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த உணவகங்களில் சாப்பிடும் பயணிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து துறையினர் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டபோது அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் உணவு தரமாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தரமற்ற உணவகங்களில் பேருந்தை நிறுத்த அரசு போக்குவரத்துக் கழகம் தடை விதித்ததுடன் தரமான உணவகங்களின் பட்டியலை வெளியிட்டு அங்கு தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பணிமனையில் இருந்து சென்னைக்கு சென்று திரும்பிய அரசு பேருந்து விக்கிரவாண்டி அருகே தனியார் உணவகத்தில் பயணிகள் உணவு அருந்த நிறுத்தப்பட்டது, அந்த உணவகத்தில் உணவு தரம் இல்லாமல் இருந்ததை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் இது அனுமதி இல்லாத உணவகம் எனவும் அரசுப் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்த வேண்டுமென அரசு வெளியிட்ட பட்டியலிலும் அந்த உணவகம் இடம்பெறவில்லை, என்பதையும் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து விருத்தாச்சலம் பணிமனையில் இது குறித்த புகார் அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொது மேலாளா் மாரிமுத்து பிறப்பித்த உத்தரவின்பேரில் தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர், குழு நடத்திய விசாரணையில் அந்த உணவகம் அனுமதி இல்லாத தரமற்ற தனியார் உணவகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த சேட்டு மற்றும் ஓட்டுநராக இருந்த விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து கடலூர் மண்டல பொது மேலாளர் மாரிமுத்து உத்தரவிட்டு உள்ளார். உணவு என்பது மக்களின் உடல் நலம் சார்ந்த விஷயம் ஆதலால் தான் தமிழக அரசு உணவகங்களை தரம் பிரித்து இந்த இந்த உணவகங்களில் தான் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது ஆனாலும் அதனை மதிக்காமல், இவ்வாறு அரசு உத்தரவை மீறி செயல் படுவோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால் தான் இனி வரும் காலங்களில் இப்படி போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்கும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் தற்பொழுது கடலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த அதிரடி முடிவு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion