மேலும் அறிய
Advertisement
இடஒதுக்கீட்டு கேட்டு அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு-கடலூரில் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்
’’கடலூரில் 13 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்ததாக பாமகவை சார்ந்த 23 பேர் ஏற்கெனவே கைது’’
வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இயற்றப்பட்டது. இந்த சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்து 10.5 % இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன, இதில் கள்ளக்குறிச்சி, சேலம், என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பெண்ணாடம் , பண்ருட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் சுமார் 11 தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கல்வீச்சு நடத்தப்பட்டது, இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வெளியிட்ட அறிக்கையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 13 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சட்ட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த 23 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு வன்னியர்களுக்காக 10.5 இடஒதுக்கீடு தமிழக அரசு பிறபித்த அரசானையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது சம்பந்தமாக, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் சின்ன கொசபள்ளம் பேருந்து நிலையம், பாலகொல்லை ஆரம்ப சுகாதார நிலையம், திருமாணிகுழி பாலம், என 13 இடங்களில் அரசு பேருந்துகளில் கண்ணாடி உடைத்து. பொது சொத்துகளை சேதப்படுத்தி. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூர்களை ஏற்படுத்தியவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய பிறப்பித்த உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய தயக்கம் காட்டி வந்தனர், ஆதலால் பொதுமக்களின் பயத்தினை போக்க காவல்துறையினரும் மக்களுக்கு பாதுகாப்பாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இரவு மற்றும் அதிகாலை களில் செல்லும் பேருந்துகள் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion