மேலும் அறிய

Minister ponmudi: இறுதிகட்டத்தில் செம்மண் குவாரி வழக்கு: அப்செட்டில் அமைச்சர் பொன்முடி

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.

அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு:  

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள  பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

51 பேர் சாட்சியம்

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம், கோதகுமார்  ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர்.

அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, இதன் விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இறுதி கட்டத்தை எட்டிய செம்மண் குவாரி வழக்கு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் அமைச்சர் பொன்முடி அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என மாற்றப்படும் - வன்னியரசு
இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என மாற்றப்படும் - வன்னியரசு
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Puducherry Power Cut (15.04.2026) : புதுச்சேரியில் மின் தடை! இன்று இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Puducherry Power Cut (15.04.2026) : புதுச்சேரியில் மின் தடை! இன்று இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
Trump Vs Jinping: ''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
Premalatha:
Premalatha: "பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு.." மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!
MK Stalin: “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
“தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ
TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Embed widget