திராவிட மாடல் அரசு குறட்டை விட்டு தூங்கியதுதான் இதற்கு காரணம் - ராமதாஸ் எதற்கு அப்படி சொன்னார்?
மத்திய நீர்வளத்துறை அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்து மாநில அரசுக்கு அறிவுறுத்தியபோதும் திராவிட மாடல் அரசு அதனை செய்யாமல் குறட்டை விட்டு தூங்கியதுதான் பாதிப்பிற்கு காரணம்.
விழுப்புரம்: மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருப்பதாகவும், மாயைகளால் மக்களின் துயரங்களை அடைத்து விட முடியாது என்றும் தமிழக அரசுக்கு வருமுன் காப்போம் திறன் இல்லை விழிப்புணர்வும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்திலுள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருப்பதாகவும், மாயைகளால் மக்களின் துயரங்களை அடைத்து விட முடியாது என்றும் ஃபெஞ்சல் புயலினால் மழை வெள்ளம், நிலச்சரிவால் திருவாண்ணாமலையில் 7 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் குடுமத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும் இரங்கலை தெரவிப்பதாக கூறினார். தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டிருந்தால் பேரழிப்பு தவிர்த்திருக்கலாம் தமிழக அரசுக்கு வருமுன் காப்போம் திறன் இல்லை விழிப்புணர்வும் இல்லை என்பதால் மழை பாதிப்புகளால் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும், சாத்தனூர் அனை நவம்பர் மாதமே 117 அடி நிரம்பியுள்ளது.
நவம்பர் 29 ஆம் தேதியே மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை நீர்மட்டத்தை குறைக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்து மாநில அரசுக்கு அறிவுறுத்தியபோதும் திராவிட மாடல் அரசு அதனை செய்யாமல் குறட்டை விட்டு தூங்கியதாகவும் முன்னறிவிப்பு இல்லாமல் அனையை திறந்து விட்டது தான் பாதிப்பிற்கு காரணம் என குற்றஞ்சாட்டினார். நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு அணையை திறப்பதாக நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது மக்களிடையே சென்றடையவில்லை சாத்தனூர் அனையில் 1. 48 லட்சம் கன அடி திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ள நீரால் கார்கள், இருசக்கர வாகனங்கள், அடித்து செல்லப்பட்டுள்ளது.
வெள்ளத்தை தடுக்க வேண்டிய அரசு வெள்ளத்தை ஏற்படுத்தியதால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு உடை குடிநீர் வழங்கவில்லை, இதனால் அமைச்சர்களை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டதாக கூறினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெறுவதாக மாயை தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும் மக்கள் தகுந்த நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதால் விவசாயிகள் பாதித்துள்ளதாக பஞ்சாப் உழவர் சார்ந்த அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளதாக கூறினார்.
இந்தியாவிலையே தமிழக உழவர்களின் நிலை மோசமாக உள்ளதாகவும் கடன் சுமை அதிகரித்து விட்டதால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தார். வேளான் விளைவிளைபொருட்களுக்கு சிறப்பு பொருளாதார கொள்கையை உருவாக்க வேண்டும். *உழவர் மாநாடு 21 ஆம் தேதி திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெறுவதாகவும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என பல உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அரசிடம் கொடுக்க உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வெண்ணையை கையில் வைத்துச்கொண்டு நடத்தாமல் முதலமைச்சர் மத்திய அரசு தான் நடத்த வேண்டுமென தெரிவிப்பதாக தெரிவித்தார்.
நாடும் முழுவதும் சிறு வணிக கடைகளின் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி எஸ் டி வரி விதிக்ககூடாது அதனை திரும்ப பெற வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்னை ஆற்றின் குறுக்கே 16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது குறித்து விசாரனை செய்ய வேண்டும் வெள்ளத்தின் சீற்றத்தால் அடித்து செல்லபட்டதை ஏற்கமுடியாது இதற்கு பின்னால் ஊழல் தான் இருக்கும் என்றும் போக்குவரத்து துறையில் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் நஷ்டத்தில் இயங்கும் மின்சார வாரிய பணியாளர்களுக்கு அகல விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடிப்பது அனுமதிக்க முடியாது ஜனநாயக முறையில் மக்கள் அனுக வேண்டும் இருப்பினும் அரசு போர்க்கால அடிபடையில் நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற செயல் நடைபெறுவதாக அரசு உணர வேண்டும், மானாமதுரையில் மின்சாரம் இல்லை என்றபோது காக்க முடியாது என்று தையல் போட்ட மருத்துவரை பாராட்ட தான் வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.