புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலை பணிகள் - மதகப்பட்டில் காமராஜர் நினைவுத்தூண் அகற்றம்
நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்த பின்னர் புதிய வளைவு, புதிய சதுக்கம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்
நான்கு வழிச்சாலை பணிகளுக்காக புதுச்சேரி எல்லையான மதகடிப்பட்டில் அமைக்கப்பட்டு இருந்த அடையாள அலங்கார வளைவு மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. புதுச்சேரி - விழுப்புரம் இடையே போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக கண்டமங்கலம், திருபுவனை, திருபுவனை பாளையம், அரியூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மழைநீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும் அமைக்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட எல்லையான மதகடிப்பட்டில் அமைந்துள்ள புதுச்சேரி நுழைவு வாயில் சாலை விரிவாக்கம் காரணமாக இடிக்கப்பட்டது.@abpnadu @SRajaJourno pic.twitter.com/YXMs5nKMy2
— SIVARANJITH (@Sivaranjithsiva) March 10, 2022
மேலும் திருபுவனை, திருவண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் கிராமப்புற சாலைகளை இணைக்கும் வகையில் 2 மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த சூழலில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டில் உள்ள அடையாள அலங்கார வளைவு மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகியவை இடிக்கப்பட்டன. இது பற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக இவைகள் இடிக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த பின்னர் புதிய வளைவு, புதிய சதுக்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்