வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; விழுப்புரம் மாவட்டத்தில் 52,010 வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 16 லட்சத்து 82,587 பேர் இடம்பெற்றுள்ளனர். 52,010 வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 16 லட்சத்து 82,587 பேர் இடம்பெற்றுள்ளனர். 52,010 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் (01.01.2023) தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இதரப்பணி மேற்கொள்வதற்கு (09.11.2022) முதல் (08.12.2022) வரை பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பணி கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் (09.11.2022) வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் சம்மந்தமான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவர்களிடம் (09.11.2022 முதல் 08.12.2022 வரை) பெறப்படும். சிறப்பு முகாம் நாட்களாக (12.11.2022) சனிக்கிழமை (13.11.2022) ஞாயிற்றுக்கிழமை, (26.11.2022) சனிக்கிழமை மற்றும் (27.11.2022) ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறும். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை (26.12.2022) அன்று முடிவு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் (05.01.2023) அன்று வெளியிடப்படும்.
இன்றைய தினம் (09.11.2022) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2476 ஆண் வாக்காளர்களும் 4028 பெண் வாக்காளர்களும் 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 6511 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டு தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 830733 ஆண் வாக்காளர்களும் 851645 பெண் வாக்காளர்களும் 209 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1682587 வாக்களர்கள் உள்ளனர்.
வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார் ஆட்சியர் அலுவலகங்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் நியமன வாக்குசாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும் இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விபரம் சரிபார்த்துக்கொள்ளலாம்.
தற்போது (09.11.2022) முதல் (08.12.2022) வரை நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் முதன்முறையாக பெயர் சேர்க்க (அதாவது பெயர் சேர்த்திட விரும்புபவர் பெயர் வேறு எங்கும் பதிவு பெறாமல் இருத்தல் வேண்டும்) படிவம் - 6 யும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6யு யும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம்-6டீ யும் வாக்களர் பெயர் நீக்கம் ஆட்சேபனை இருந்தால் படிவம்-7 யும் குடியிருப்பை மாற்றியதற்கானஃ நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கான திருத்தம் இல்லாத மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கு படிவம்-8 யும் போன்ற படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
பல்வேறு கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் அளிக்கும் போது அவர்களின் முந்தைய முகவரி கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும். இதை தவிர இளம் வாக்காளர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஜனவரி1, ஏப்ரல் – 1, ஜுலை-1, மற்றும் அக்டோபர் -1 என ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாட்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். 2023-வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 09.11.2022 முதல் 08.12.2022 வரையிலான காலங்களில் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர் ஆகியோரால் பெறப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள் இணையதளம் ( www.nvsp.in/ Voter Portal.eci.gov.in/ VHA (Voter Helpline APP ) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.