புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு; 200 வியாபாரிகள் சாலை மறியல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளை போலீசார் வலுகட்டயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியின் நகரப்பகுதியான காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ளது பழமை வாய்ந்த குபேர் அங்காடி. இங்கு காய்கறி, மளிகை, மீன் அங்காடி என 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் திட்ட பணியின் கீழ் குபேர் மார்க்கெட்டை இடித்து மீண்டும் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல்https://t.co/wupaoCzH82 | #puducherry #smartcity #Market #protest pic.twitter.com/VUfJSYmet6
— ABP Nadu (@abpnadu) July 14, 2023
இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நகரின் மைய பகுதியான காமராஜர் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வியாபாரிகள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் வலுகட்டயமாக அங்கிருந்தவர்களை கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்