(Source: ECI | ABP NEWS)
ஒரே மேடையில் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன்; விழுப்புரம் திமுகவில் திடீர் மாற்றம்... என்ன காரணம் ?
ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் எம்எல்ஏ இலட்சுமணன், அன்னியூர் சிவா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம்: அண்ணா பெரியாரை இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக சேராத இடம்கண்டு சேர்ந்துள்ளதாகவும், வரலாற்றையே மறைக்கும் அளவிற்கு கீழடி அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜூலை 1 முதல் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முட, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் சென்று தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியை இல்லம் தோறும் எடுத்து செல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும், தமிழகத்தில் மொழிக்கு, இனத்திற்கு, வரலாற்றுக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தினை எடுத்துரைக்க வேண்டும். இந்தியை புகுத்த வேண்டுமென ஒன்றிய அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் இருக்கும் தமிழை காப்போம் தமிழ் மொழியை காப்போம் என்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து உயிர் தியாகம் செய்த மண்தான் தமிழகம் என்றும் மொழியின் அடிப்படையிலும் நாட்டின் உணர்வின் அடிப்படையில் ஒன்றாக்க வேண்டும் என்பது தான் ஓரணியில் தமிழ்நாடு என கூறினார். தமிழர் வரலாற்றையே மறைக்கும் அளவிற்கு கீழடி அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுப்பதாகவும் ஒன்றியத்தில் பாசீச ஆட்சியாக உள்ளது நீட் தேர்வினை கைவிட மறுப்பதாகவும், இரு மொழிக்கொள்கை தான் தமிழகத்தில் தமிழில் பயில்பவர்களுக்கு அரசு வேலை சலுகைகளை ஸ்டாலின் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகள் இல்லம் தோறும் கொண்டு செல்ல வேண்டும் எதிர்க்கட்சி வீடுகளாக இருந்தாலும் நான்காண்டு சாதனை எடுத்து செல்ல வேண்டும், அண்ணா பெரியாரை இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக சேராத இடம்கண்டு சேர்ந்துள்ளதாகவும், மொழி வாரியாகவும் இன வாரியாகவும் பிரிக்க கூடாது பாசீசத்தை உட்புகுத்த விட கூடாது என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் எம்எல்ஏ இலட்சுமணன், அன்னியூர் சிவா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















