மேலும் அறிய

விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

பள்ளி, கல்லூரி மாணவர்களை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து முடிதிருத்தம் பணியை காவல்துறையினர் மேற்கொண்டது பாராட்டிற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. மேலும் சிதம்பரம் நகரை சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாள்தோறும்  பள்ளி, கல்லூரி, ஐடிஐ  பாலிடெக்னிக் என சிதம்பரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

இந்த சூழலில் கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கற்ற முறையில் லைன் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் எனத் தலைமுடியை டிஸைன் டிஸைனாக வெட்டிக்கொண்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களில் பள்ளிக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இப்படியான சிகை அலங்காரத்தினால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் குறைந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. இதுபோன்று முடி வளர்த்து வருவது கலாச்சாரமாக மாறி வருவதுடன், இந்த ஹேர் ஸ்டைல்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகி மாணவர்களிடையே இதனால் கடும் மோதல் போக்கும் உருவாகி வருகிறது. மாணவர்களை பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வளவு கூறியும், அவர்களின் இந்த ஹேர் ஸ்டைலை மாற்ற முடியவில்லை.

விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

இந்நிலையில், இதனை தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியில் இறங்கினர். தொடர்ந்து ஹேர் ஸ்டைல் தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டு, அப்போது, தலை முழுவதும் அதிக முடி, சீரற்ற முறையில் சிகை அலங்காரம் வைத்திருந்த கல்லூரி, ஐடிஐ, பள்ளி மாணவர்களை  சிதம்பரம் காவல்துறையினர் ரவுண்டு கட்டி பிடித்தனர். பின்னர், பேருந்து நிலையம் என்றும் பாராமல், மாணவர்கள் என்றால் இப்படித்தான் முடி வெட்டி இருக்க வேண்டும் என கூறி அவர்களுக்கு அங்கேயே முடி திருத்தம் செய்தனர். மேலும், அவர்களுக்கு கல்வி பயிலும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 

விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

இதில் கல்லூரி மாணவர் ஒருவர் எக்ஸாம் முடிந்து தேர்வில் வெற்றி பெற்ற பிறகு கோயிலுக்கு சென்று மொட்டை அடிக்க போறேன் சார் என்று சொன்னது காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது, மாணவர்களுக்கு காவல்துறையினர் முடி திருத்தம் செய்ததற்கு ஒரு புறம் பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தாலும், கடந்த ஆண்டு, வேலூர் அண்ணாசாலையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் இப்படியான ஹேர்கட்டுடன் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சொந்தச் செலவில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே சிகை அலங்காரம் செய்துவிட்டார். சிகையைச் சீர்படுத்திய தலைமை ஆசிரியரின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் செயல் விமர்சனத்துள்ளாகி சர்ச்சையைக் கிளப்பியது.

விதவிதமான ஸ்டைலில் ஹேர் கட்டிங்.... களத்தில் இறங்கி கட்டிங் செய்த போலீஸ்... ஓடிய மாணவர்கள்..!

அதுபோன்று இப்படியான ஹேர்ஸ்டைல்களில் மாணவர்கள் பள்ளிக்குவந்தால், சிகை அலங்காரம் செய்துவிட்ட சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சிதம்பரம் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு பெருகுமா? அல்லது விமர்சனம் அதிகரிக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget