மேலும் அறிய

Puducherry Election: யார் அந்த 14 பேர்? புதுச்சேரி பாஜகவின் மெகா பிளான்... ரெடியாகும் தேர்தல் அறிக்கை!

புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் நாளை டெல்லிக்கு அவசரமாகப் பயணம் மேற்கொள்கின்றனர்.

புதுச்சேரி: புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் நாளை டெல்லிக்கு அவசரமாகப் பயணம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேட்பாளர் தேர்வு தீவிரம்

“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் கடந்த திங்கள்கிழமை முதலே தொடங்கிவிட்டன. கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.பாஜக மேலிடத்தின் அழைப்பின் பேரில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவராகிய நானும் நாளை டெல்லி செல்கிறோம். அங்கு கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.”

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பெயர்கள்

“தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரி பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 உத்தேச வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலிலிருந்து தகுதியான ஒருவரை கட்சியின் மேலிடம் முடிவு செய்து, ஜனநாயக முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.”

மன்சுக் மாண்டவியா வருகை

புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா இன்று மாலை புதுச்சேரி வருகிறார். அவர் இங்குள்ள தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் தயார் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மோடி, அமித் ஷா பங்கேற்கும் ‘ரோடு ஷோ’

பிரச்சாரம் குறித்த திட்டங்களை விளக்கிய அவர், “வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு, பொதுமக்களைச் சந்திக்க 13 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, புதுச்சேரியில் பிரம்மாண்டமான முறையில் ரோடு ஷோ (Road Show) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன,” என்றார்.

தேர்தல் அறிக்கை

“புதுச்சேரி பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும், லட்சிய ஜனநாயகக் கட்சி கூட்டணியில் நீடிப்பது குறித்தும் பாஜக தேசியத் தலைமை விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும்,” என வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
Embed widget