Kallakurichi: வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு; தலைகீழாக நின்று கோரிக்கை விடுத்த பாமக நிர்வாகி
கள்ளக்குறிச்சி அருகே வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைகீழாக நின்று கோரிக்கை விடுத்த பாமக நிர்வாகி
கள்ளக்குறிச்சி அருகே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைகீழாக நின்று கோரிக்கை பாமக நிர்வாகி விடுத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தியாகதுருகம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் மணி அவர்கள் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைகீழாக நின்று ஆட்சியாளர்களுக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்தார்.
நேற்று முன் தினம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது...
அதில் பாமக தலைவர் அன்புமணி கூறுகையில்... இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று கொடுத்தவர் மருத்துவர் ராமதாஸ். ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டு பின் பாஜக உருவானது. அதுபோல வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டு பாமக உருவானது. நாம் நாட்டுக்கு பெற்று கொடுத்ததை போல வேறு யாரும், எந்த கட்சியும் பெற்றுதரவில்லை. பாமகவுடன் சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத்தாயம் என 34 அமைப்புகள் இயங்கிவருகிறது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு எத்தனை அவமானங்கள், போராட்டங்கள் நடத்தி அரசை கெஞ்சினோம். இதை பெறுவதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும். வன்னியர் சங்க மாநாடு நடத்த அனுமதி தற்போது கிடைக்கவில்லை. விரைவில் நடக்கும். எனவே சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டாம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு இக்கல்வி ஆண்டுக்குள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அரசுக்கு 22 லட்சம் கடிதங்கள் சென்றுள்ளது. இன்னமும் 28 லட்சம் கடிதங்களை அனுப்ப கட்சி நிர்வாகிகள் முயற்சி எடுக்கவேண்டும். இது மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும்.
இம்மாதத்திற்குள் அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க ராமதாஸ் முடிவெடுப்பார். மது ஒழிப்பைப்பற்றி அனைத்து அரசியல் கட்சிகள் பேசும் நிலைக்கு கொண்டுவர மருத்துவர் ராமதாஸ் தான் காரணம் என கூறினார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தியாகதுருகம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் மணி வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைகீழாக நின்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சுழல் நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்