மேலும் அறிய
என்எல்சி நிறுவன முத்தரப்பு கூட்டம் - பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வெளிநடப்பு
நிலம் மற்றும் வீடு உடைய உரிமையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சரியீட்டுத் தொகை சுமார் 72 லட்சம் வரை வழங்கப்படும் என நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தகவல்.

என்எல்சி நிறுவனம்
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்.எல்.சி .இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு பணி தொடர்பாக அனைத்து கட்சி மற்றும் என்எல்சி நிர்வாகம்,மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு கூட்டம் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன் புவனகிரி அருண்மொழித்தேவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னாள் எம்எல்ஏ துரை சரவணன், வி.சி.க. ம.தி.மு.க. , கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சி மாவட்ட செயலாளர்கள், என்எல்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இக்கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வெளிநடப்பு செய்தார். இக்கூட்டம் நடப்பதை அறிய வந்த ஏராளமான விவசாயிகளை அனுமதிக்காமல், ஆங்காங்கே காவல்துறையை வைத்து மிரட்டியதும், ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் (அதிமுக) சில கோரிக்கைகளை வைத்து பேசிவிட்டு வெளியேறினார்.
மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி சம்பந்தமாக ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த காலங்களை விட உயர்த்தப்பட்ட சரியீட்டுத் தொகை, மறுவாழ்வு, மறு குடிமர்வுக்கான பணப்பலன், வேலைவாய்ப்பு என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
குறிப்பாக உயர்த்தப்பட்ட சரியீட்டுத்தொகை ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு உடைய உரிமையாளர்களுக்கு சுமார் 73 லட்சம் வரை என சரியீட்டு தொகையாகவும், மற்றும் மறுவாழ்வு, மறு கூடியவர்களுக்கான பணபலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சம் என இருந்ததை தற்போது தமிழக அரசு 25 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும் நில எடுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த என்எல்சி நிறுவனத்தின் சி எஸ் ஆர் எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். என்எல்சி நிறுவனத்தில் ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு, நில எடுப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட டிப்ளமோ ஐடிஐ 3 ஆண்டுகள் தொழிற்கல்வி க்கான பயிற்சி 500 நபர்களுக்கு வழங்கி அடுத்த நான்காண்டுகளில் நிரந்தர வேலை வாய்ப்பு என பல்வேறு பலன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை கறி வெட்டி வளையமாதேவி கீழ் பாதி, வளையமாதேவி மேல் பாதி ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்ட 548 விண்ணப்பங்களில் 250 நபர்களுக்கு 15.68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















