திமுகவின் கொள்கைகளை ஊன்றி வளர்ந்தவர் தான் உதயநிதி - அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொறுப்பினை யாரிடம் கொடுக்க வேண்டும் என அறிந்து செயல்படும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதால் தான் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: அமைச்சர் பொறுப்பினை யாரிடம் கொடுக்க வேண்டும் என அறிந்து செயல்படும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதால் தான் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் இயக்க வரலாற்றையும், மொழி உணர்வை தெரிந்து கொள்ளவேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுகவின் இரண்டாவது மண்டல இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் அமைச்சர் பொன்முடி திமுக எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி இளைஞர் அணியினர் கையில் தான் உள்ளதாகவும், இளைஞர் அணியில் ஸ்டாலின் ஆற்றாத பணிகள் கிடையாது என்றும் இளைஞர்கள் இயக்க வரலாற்றையும், மொழி உணர்வை தெரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
திமுகவில் தலைவர் ஸ்டாலின் விட்ட வழியில் தான் அவரது பிள்ளை உதயநிதி செயல்படுவதாகவும் திமுகவின் கொள்கைகளை ஊன்றி வளர்ந்தவர் தான் உதயநிதி என கூறினார். மேலும் அமைச்சர் பொறுப்பினை யாரிடம் கொடுக்க வேண்டும் என அறிந்து செயல்படும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதால் தான் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கபட்டுள்ளதாகவும், இந்தியை புகுத்த வேண்டும் என அமித்ஷா பேசியிருப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பதாக கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.