மேலும் அறிய

மாமன்றக்கூட்டத்தில் மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை - கடலூர் மேயர் சுந்தரி வேதனை

கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை அமைச்சர் நிகழ்ச்சிக்காக புறக்கணித்த கவுன்சிலர்கள்.

கிராமசபை கூட்டத்தைப் போன்று மாநகர சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக முதல்வர் அறிவித்தார். இதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்நிலையில் அமைக்கப்படும் குழு கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நியமிக்கப்படுவதாக கூறி கடந்த மாமன்ற கூட்டத்தில் விசிக, பாமக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடனேயே மீண்டும் பாஜக கவுன்சிலர் சக்திவேல் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நடராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நடராஜன் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டு பேசிய மேயர் சுந்தரி ராஜா, மாமன்ற கூட்டத்தில் மேயருக்கும், மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை என வேதனையோடு  தெரிவித்தார்.
 
இதனையடுத்து கடலூரில் உழவர் மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் நிகழ்வு இருந்ததன் காரணத்தினால் கூட்டம் சிறிது நேரத்திலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் 10த்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------
மன வளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை -கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
 
கடலூர் அருகே உள்ள குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மன வளர்ச்சி குன்றிய சிறுமி. இந்த சிறுமியை அவரது பெற்றோர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த  சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

மாமன்றக்கூட்டத்தில் மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை -  கடலூர் மேயர் சுந்தரி வேதனை
 
விசாரணையில் குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்த ராஜ் முகமது மகன் சாகுல் அமீது (42) என்பவர், அந்த மன வளர்ச்சிக்கு குன்றிய சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாகுல் அமீதை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் சாகுல் அமீது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.6 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா செல்வி ஆஜராகி வாதாடினார்.

தவறான மகப்பேறு அறுவை சிகிச்சை - உடல்நிலை பாதிப்பட்ட பெண்
மாவட்ட ஆட்சியரிடம் புகார்
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
 
எனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது கடந்த 19.9.2022 அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, ஆண் குழந்தை பிறந்தது. 11 நாட்கள் எனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 14.10.2022 அன்று எனது மனைவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

மாமன்றக்கூட்டத்தில் மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை -  கடலூர் மேயர் சுந்தரி வேதனை
 
இதனால் எனது மனைவியை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு மூன்று நாள் சிகிச்சை அளித்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, கடலூர் அரசு மருத்துவமனையில் செய்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதாக கூறினர். அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்த பின்னரே எனது மனைவிக்கு வயிற்று வலி குணமானது. தற்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் எனது மனைவியின் உடல்நிலை உள்ளது. எனவே தவறான அறுவை சிகிச்சை செய்த கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget