மேலும் அறிய

TN Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஸ்ட்ராங் ரூமுக்கு சீல்... துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை சீல் வைக்கப்பட்டது.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில்  மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் வாக்காளர் அதிகாலையில் இருந்தே வாக்களித்து வந்தனர். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1068 வாக்குச்சாவடி மையங்களில் 1966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. 

விழுப்புரம் தனி தொகுதியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பெண் வாக்காளர்களும் மாற்றுபாலினத்தவர் 209 பேர் என மொத்தம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர்  உள்ளனர். இதற்காக 4152 வாக்கு பதிவு கருவிகளும், 2076 கன்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2249 வி.வி.பேட் எனப்படும் உறுதிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பிற்காக 2200 காவல்துறையினரும், 344 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், 6804 பேர் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

76.47 சதவிகித வாக்குகள் பதிவு 

இந்த நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 5,69,070, பெண் வாக்காளர்கள் 5,80,256, மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட வாக்குகளை ஒப்பிடுகையில், 2019 விழுப்புரம் தொகுதி  அங்கு வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 14,43,436. பதிவான வாக்குகள் 11,28,998 பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 78.21%. 2024 ஆண்டு வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின்  எண்ணிக்கை 15,03,115. பதிவான வாக்குகள் 1104639. பதிவான வாக்குகள் சதவீதம் 73.49%. 2019 இன் படி 3,19,438 பேர் வாக்களிக்கவில்லை.

ஸ்ட்ராங் ரூம் 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 76.46 சதவிகித  வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்வாக்காளர்கள் 5,69,070 பெண் வாக்காளர்கள் 5,80,256 மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்தனர். இதில் 8424 தபால் வாக்குகள் பதிவாகின.  விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட  ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 ஸ்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கபட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் வைக்கப்பட்டு  ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமையில் சீல் வைக்குப்பட்டது. விழுப்புரம் வாக்கு என்னும் மையத்திற்கு துணை ராணுவப்படை, தமிழக சிறப்பு காவல் படை, தமிழக காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget