மேலும் அறிய
Advertisement
Local body election | கொசு மருந்து அடித்தும், திருக்குறள் புத்தகம் வழங்கியும் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
கடலூர் மாநகராட்சி 10 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ராஜமொகன் என்பவர் குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் வாய்ப்பாடு புத்தகங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்றுவரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்பொழுது கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
மேலும் கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாநகராட்சி முதல் தேர்தல் நடைபெற உள்ளது, இந்த சூழ்நிலையில் கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் தற்போது கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிகள் சார்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள சூழலில் கடலூர் மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வித்தியாச வித்தியாசமான முறைகளில் வாக்காளர்களை கவரும் வண்ணத்தில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்தநிலையில் கடலூர் 13வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் நடராஜன் என்பவர் நான் வெற்றி பெற்று வந்தால் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண்பேன் என வலியுறுத்தி முன்னதாகவே கொசு மருந்தை வீடுவீடாக தெருக்கள் முழுவதும் தெளித்து வாக்குகளை சேகரித்தார்.
மேலும், இதே போல் கடலூர் மாநகராட்சியின் 10 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ராஜமொகன் என்பவர் வார்டு பகுதியில் வாக்கு சேகரிப்பின் பொழுது, அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என கூறி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், இவர் தான் தமிழகத்தில் அதிகம் படித்த மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion