Accident: கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் கவிழ்ந்த பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?
கள்ளக்குறிச்சி: பள்ளி பேருந்து ஏரிக்குள் கவிழ்ந்து விபத்து...25 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம்
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம், கள்ளக்குறிச்சியில் இருந்து தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பொற்படாக்குறிச்சி வழியாக கனங்கூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பொற்படாக்குறிச்சிக்கும், எறவார் கிராமத்துக்கும் இடையே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் செய்த மாணவ மாணவிகள் கூச்சலிட்டனர்.
25 மாணவ, மாணவிகள் காயம்:
இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச்சென்று பேருந்திற்குள் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் வானவரெட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் சத்ருஜி, கனங்கூர் பிரபு மகள் தஷ்வினா, குமார் மகன் அகிலேஷ், தீபிகா, மலைக்கோட்டாலம் கிராமம் குமரேசன் மகன் எழிலரசன், விளம்பார் கிராமம் சுப்பிரமணி மகள் மகேஸ்வரி, காட்டனந்தல் கிராமம் தஷ்மிதா, கவினேஷ் மற்றும் கிஷோர்குமார், மொழிதேவன், இனியா, கவுதம் உள்பட 25 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பேருந்து ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ மாணவிகள் 25 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்