Kallakurichi Incident: மாணவி பயன்படுத்திய செல்போன் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
இன்றை தினம் மாணவியின் தாயார் செல்வி தனது வழக்கறிஞர் லூசி உடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் செல்போனை ஒப்படைக்க வந்து மனுதாக்கல் செய்தனர்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் மாணவி பயன்படுத்திய செல்போனை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் இன்று அவரது தாயார் செல்வி ஒப்படைத்தார்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் 4 முறை மாணவியின் தாயார் செல்விக்கு சம்மன் அனுப்பினார். அந்த சம்மனை பெற்று செல்போன் ஒப்படைக்காத நிலையில் வருகின்ற பிப்ரவரி 1.2.2023 ஆம் தேதி வழக்கு விசாரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருவதால் அதற்குள் செல்போனை விசாரனை அதிகாரியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதால், இன்றை தினம் மாணவியின் தாயார் செல்வி தனது வழக்கறிஞர் லூசி உடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் செல்போனை ஒப்படைக்க வந்து மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரனைக்கு வந்தபோது நீதிபதி புஷ்பராணி இவ்வழக்கு விசாரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதாலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விசாரனை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனு திரும்ப பெறப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவியின் தாயார் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி செல்போனை இன்று விழுப்புரம் வண்டிமேட்டிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடி எஸ் பி கோமதியிடம் ஒப்படைத்தனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















