மேலும் அறிய

மோசமான நிலையில் தமிழகம்; திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் கொடுமைகள் - கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே கிடையாது என்கிற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது

விழுப்புரம்: விசிக ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று சொல்வது தொலைநோக்கு பார்வையில் கூறுவதாகவும், தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதாகவும் பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே கிடையாது என்கிற மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர்  பாலகிருஷ்ணன் தலைமையில் விழுப்புரத்தில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு

ஜனவரி 3 ஆம் தேதி விழுப்புரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு மூன்று நாட்கள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் நடைபெறுவதாகவும், இதில் பிரகாஷ்காரத் கலந்து கொள்ள உள்ளதாகவும், தமிழகத்தில் சாதிய மோதல்கள், சாதிய அமைப்புகள்  வலுவடைந்து வருவதால் சாதிய சமுக அமைப்புகளுக்கு முடிவு கட்ட சாதிமதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் போராட  முன்வரவேண்டுமென செய்தியை வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டுமென தீர்மானித்து உள்ளதாக கூறினார்.  தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களுக்கு  மொட்டை அடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், இலங்கை அரசையும் இலங்கை ராணுவத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் 20 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற உள்ளதாக கூறினார்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகிறது. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே கிடையாது என்கிற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள் நாங்கள் வைத்துள்ள சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென  தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாஜக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சிஐடியூ தேவையில்லாமல் போரட்டத்தை தூண்டிவிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையிலையே அங்கு இருக்கிற மக்களுக்கு தெரியும் ரவுடீசத்தை ஊக்குவிக்கிறது, தொழிற் சங்க நிர்வாகிகளை மிரட்டி அடி பணிய வைக்கும் செயலை பாஜகவினர் செய்து வருவதாகவும் இதில் உண்மைக்கு மாறாக செயல்படும்  பாஜகவை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். நிர்மலா சீத்தாராமன் கோவையில் பேசியது என்ன மோசமான பேச்சு என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தென்மாநிலங்களின் மாநில மாநாட்டினை கேரளாவில் நடத்தி பல தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள் என கூறினார். 

மது ஒழிப்பு கொள்கை

மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கை தான் ஆனால் அது உடனே கொண்டு வரமுடியுமா என்பது சிக்கலாக உள்ளது. மத்திய அரசு மதுவிலக்கு சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டுமென அவர்களே கூறியிருக்கிறார்கள். மது விலக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது மாநில அரசின் உரிமைகள் அப்படிப்பட்ட மாநில அரசுகளுக்கு  அதிகமான உரிமை வேண்டுமென கேட்டுகொண்டிருக்கிற இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தா எப்படி பொருத்தமா இருக்கும் என்பது தெரியவில்லை இருந்தாலும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்திருந்திருக்கிறார்கள் நாங்களும் செல்வதாக தெரிவித்தார். 

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று விசிக கேட்கபதாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன்... முதலமைச்சரை சந்தித்த பின் அவர்கள் தெளிவாக நீண்ட கால கோரிக்கை இப்ப ஒன்னும் கேட்கல என்றும் எல்லா கட்சியின் நோக்கம் என்பது ஆட்சியிலும் அதிகாரத்திலும் வரவேண்டும் என்பது இருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியை பொருத்தவரை அதில் வேறுபட்டு இருப்பதாகவும் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் பங்கேற்பது தான் எங்களது நோக்கம் என தெரிவித்தார்.  விசிக ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று சொல்வது தொலைநோக்கு பார்வையில் கூறுகிறார்கள் அது 2026 தேர்தலில் இல்லை என அவர்கள் கூறிவிட்டார்கள் நாங்களும் தெரிவித்துவிட்டதாகவும்  மக்களின் குறைகளை நீக்குற செயல்திட்டத்தில் பங்கு வேண்டும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்Ponmudi | ”பட்டாவ வாங்க மாட்டோம்” பெண்கள் வாக்குவாதம் கடுப்பான பொன்முடி | Villupuram | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கள்ளக்குறிச்சியில் பயங்கரம்... மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்
கள்ளக்குறிச்சியில் பயங்கரம்... மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்
Embed widget