கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது - காவல்துறை
’’கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 43 கொலை வழக்குகளில் 42 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 51 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன’’
கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 43 கொலை வழக்குகளில் 42 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 51 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. குடிபோதையில் வாகனம் ஒட்டிய 253 நபர்கள் மீதும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 23083 நபர்கள் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற வாகன வழக்குகள் 1766 என மொத்தம் 4.73.132 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 39,07,424 வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் 388 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 533 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 91.10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 9,11,600 ஆகும். மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை வழக்குகள் 703 பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 714 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 6600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 59,07,600 ஆகும். கடலூர் மாவட்டத்தில் மது கடத்துவோர், மது விற்பனை செய்வோர் என் 9919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,094 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 21,278 லிட்டர் சாராயம். 50,043 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.