மேலும் அறிய
Advertisement
விழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கு சீருடைப்பணியாளர் பணிக்கான உடல்தகுதி தேர்வு இன்று தொடங்கியது.
விழுப்புரத்தில் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கு உடல்தகுதி தேர்வு இன்று தொடங்கியது. விழுப்புரம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்ற சீருடை பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை எழுத விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 15,670 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 13,547 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,123 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதன் தேர்ச்சி முடிவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களும், 190 பெண்களும் என மொத்தம் 1,061 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று முதல் . இத்தேர்வானது விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த உடல்தகுதி தேர்வுக்கு விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் நாள் தேர்வில் கலந்துக்கொள்ள 450 பேர் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலை முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பனி பொழிவிலும் சாலையில் காக்க வைத்ததால் தேர்வுக்கு வந்த இளைஞர்கள் அவதிக்குள்ளாகினர். விழுப்புரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் தலைமையில் இவர்களுக்கு உடல்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடக்கிறது. இதில் உயரம், மார்பளவு சரிபார்க்கப்பட்ட பின்னர் 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெறுகிறது. அடுத்தகட்ட தேர்வு இதில் தகுதி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை உடற்திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் நடைபெறும்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion