மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான் - மருத்துவர் ராமதாஸ்

மது ஒழிப்பை பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடிவருகிறது - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: மது ஒழிப்பைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு பயிர் கடன் வாங்க வேண்டும் 

காவிரி பாசன விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவு வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கி வைத்திருப்பதே இதற்கு காரணமாகும். ரூ.1 கோடிக்கும் மேல் பரிவர்த்தனை உள்ள கணக்குகளை 11 சதவீதம் பிடித்தம் செய்யாததால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது . இதனால் சம்பா சாகுபடிக்கு கடன் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்க்ப்படுவார்கள். வருமானவரித்துறையிடம் பேசி இந்த முடக்கத்தை நீக்க முயற்சி செய்யவேண்டும்.

தொழில் முதலீடுகள் 

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என தொடர்ந்து சொல்லிவருகிறோம். ஆனால் அதற்கு முதல்வர் மறுத்து வருகிறார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 9540 கோடி முதலீடு கிடைக்கும் என்று சொல்லிவருகிறார். ஒரு பைசாகூட வரவில்லை என நான் கூறிவருகிறேன். முதல்வரின் ஸ்பெயின் பயணத்தில் தூத்துகுடி அருகே தளவாட பூங்கா அமைக்க ரூ2500 கோடி முதலீடு செய்வது குறித்து உறுதியான திட்டம் இல்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவேதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக வலியிறுத்திவருகிறது. 

இட ஒதுக்கீடு விவகாரம் 

20 மாதங்களாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ன செய்துகொண்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் கல்வி மறரும் வேலைவாய்ப்பில் 20 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய ஆய்வு செய்து அறிக்கை வெளியிட பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அரசு ஆணையுட்டு இன்றுடன் 20 மாதங்கள் முடிந்தும் இந்த ஆணையம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை . முதலில் 3 மாதங்கள் காலக்கெடு அளிக்கப்பட்டு பின் 3 முறை காலக்கெடு நீடிக்கப்பட்டது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திரட்ட ஆணையம் என்ன செய்யப்போகிறது? இல்லை முதல்வர் கூறியது போல மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தும்வரை காத்திருக்கப்போகிறதா? பிறகு இந்த ஆணையம் உள்ளது? அரசும் ஆணையமும் கூட்டணி அமைத்துக்கொண்டு வன்னிய மக்களை ஏமாற்ற வேண்டும் என நினைத்தால் அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

நெல் கொள்முதல் நிலைய ஊழல் 

நெல்கொள்முதல் நிலைய ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கடலூர் மவட்டம், வலசக்காடு நெல்முதல் கொள்முதல் செய்ய ரூ 50 ஆயிரம் கையூட்டு கேட்டதால் விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மூட்டை ஒன்றுக்கு ரூ 50 கையூட்டு பெறப்படுகிறது. வேளாண் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்நிலை உள்ளது. இந்த ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க்வேண்டும். 

கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்க மறுத்தால் வழக்கு தொடர வேண்டும்

தமிழகத்திற்கு கல்விநிதியை மத்திய அரசு ஒதுக்க மறுத்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவேண்டும். தமிழகத்திற்கு ரூ 573 கோடி ஒதுக்க மத்திய அரசு மறுத்துள்ளதால் மோதல் முற்றுகிறது. பிஎம் சி பள்ளிகளை தமிழகத்தில் திறக்கவேண்டும், அதில் மூலம் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும். அமைச்சர் குழுவை டெல்லிக்கு அனுப்பி கல்வி நிதியை வழங்க வலிறுத்தவேண்டும். மேலும் மறுத்தால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சீன பூண்டுகள் விற்பனையை தடுக்க வேண்டும்

சீனா பூண்டுகள் உடல்நலத்திற்கு கேடு என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட நிலையில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் பூண்டுகள் பூச்சிமருந்து தெளிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பூஞ்சை உள்ளது. அதில் மருத்துவ நலன்கள் ஏதுமில்லை. இப்பூண்டு ஆபத்தானது. இந்த பூண்டு விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும். கடை கடையாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்யவேண்டும். 

மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு மருத்துவர் ராமதாஸ் பதிலளித்து கூறியது,

தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடிவருகிறது. ராஜாஜி, ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். இதை திமுக ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார் . ஆனாலும் மது வில்க்கை ரத்து செய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள் . 35 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. டாஸ்மாக் திறந்தபோது 7200‌ கடைகளை 4800 ஆக குறைத்தது பாமக தான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமகதான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10மணி நேரமாக குறைத்தது பாமக. பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்த தொடங்கியது. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget