மேலும் அறிய

திமுகவிற்கு ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்; செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன ?

அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை இல்லை. திமுக அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை - மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம்: வேங்கைவயல் குற்றவாளிகளை கண்டிபிடிக்காத திராவிட மாடல் அரசு வெட்கி தலைகுணிய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்...

வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதிக்காக திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். குற்றவாளி யார் என்று கூட காவல்துறையால் துப்பு துலக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இதே நாள் 2 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நடைபெற்றது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டும் இன்னமும் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, குற்றப்பத்திரிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என நீதிமன்றம் கேட்டும் காவல்துறை பதில் சொல்லவில்லை. இதில் குற்றவாளி யார் என ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி நிகழ்த்தப்படுகிறது. இதற்கு அம்மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒதுக்கவேண்டும். 

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டி நேற்று முன் தினம் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் கொடுத்த இட ஒதுக்கீட்டை மீண்டும் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வருகின்ற 6ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும்.

பாமகவின் கொள்கை வழிகாட்டி அம்பேத்கர்தான். இந்தியாவிலேயே கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கட்சி பாமக. அம்பேத்கரின் பெருமைகளை காப்பதாக சொல்லும் திமுக. அவருக்காக என்ன செய்துள்ளது? 1990ல் சென்னை சட்டக்கல்லூரிக்கும், 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்டபல்கலை கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை இல்லை. திமுக அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை. 

அண்ணா பல்கலை கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது திமுக வெட்கி தலை குனியவேண்டும். கைது செய்யப்பட்ட ஞானசேகரன்மீது 15 குற்றவழக்குகள் உள்ளதாக காவல்துறை சொல்கிறது. கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி என கூறப்படுகிறது. இதற்கு கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். பொறுப்புள்ள அமைச்சர் இப்படி சொல்லலாமா? 

தமிழக அரசின் மூலதன செலவுகள் கடந்த ஆட்சியைவிட 8.40 சதவீதம் குறைந்துள்ளதாக தலைமை கணக்காயர் அலுவலகம் கூறியுள்ளது. மூலதன செலவுகளை செய்வதில் செய்யும் தாமதம் தமிழக வளர்ச்சியை குறைக்கும். கடன் வாங்குவதில் இலக்கை தாண்டும் திமுக அரசு மூலதன செலவுகளை செய்வதில் சுணக்கம் காட்டுவது காண்டிக்கதக்கது.

மதுரை மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள டங்ஸ்டம் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
அதிர்ச்சி! மீன்பிடி திருவிழாவில் நுழைந்த ‘ராட்சச’ டேங்க் கிளீனர் மீன்கள்! - கரையிலேயே கொட்டிச் சென்ற கிராம மக்கள்!
அதிர்ச்சி! மீன்பிடி திருவிழாவில் நுழைந்த ‘ராட்சச’ டேங்க் கிளீனர் மீன்கள்! - கரையிலேயே கொட்டிச் சென்ற கிராம மக்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget