விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திறிந்த நாய்கள் - அதிர்ச்சி வீடியோ
சுகாதாரமாக இருக்க வேண்டிய மருத்துவமனையில் நாய்கள் சுற்றி திரியும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயவியல் சிகிச்சை பிரிவில் நாய்கள் சுற்றித்திறிந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து விதமான சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் உள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்
இந்நிலையில் மருத்துவ கல்லூரியில் இதயவியல் சிகிச்சை பிரிவில் நாய்கள் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் முக்கியமான உயர் சிகிச்சை பிரிவில் சுகாதரமற்ற முறையில் நாய்கள் சுற்றிதிரிவது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு வருபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமாக இருக்க வேண்டிய மருத்துவமனையில் நாய்கள் சுற்றி திரியும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.