Republic Day 2025 Parade LIVE: டெல்லியில் கோலாகலம்..! பிரமாண்ட அணிவகுப்பு, வியக்கவைக்கும் இந்திய ராணுவ பலம்
Republic Day 2025 Parade LIVE: குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு, பொதுமக்களை கவர்ந்துள்ளது.

Republic Day 2025 Parade LIVE: குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு, நாட்டின் கலாச்சாரம் மற்றும் ராணுவத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம்:
நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்ற உள்ளார். 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள் ஸ்வர்னிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு), இது இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றப் பயணத்தையும் பிரதிபலிக்கிறது.
அணிவகுப்பு எங்கு? எப்போது? | Republic Day 2025 Parade Timing
குடியரசு தின அணிவகுப்பு காலை 10:30 மணிக்கு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கி கர்தவ்யா பாதை வழியாகச் சென்று, இந்தியா கேட் கடந்து, செங்கோட்டையில் முடிவடையும். குடியரசு தின 76வது குடியரசு தின அணிவகுப்பானது இந்தியாவின் ராணுவ வலிமை, தேசிய வளர்ச்சி மற்றும் பல்வேறு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்.
">
கலாச்சார அணிவகுப்பு:
குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 16 மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் 15 உட்பட 26 அலங்கார ஊர்திகள் இடம்பெறும். தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்றதால், இந்த ஆண்டு இடம்பெறவில்லை.
ராணுவ பலம்:
அணிவகுப்பில் இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களில் கண்டுள்ள முன்னேற்றமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு தந்திரோபாய ஏவுகணை 'பிரளய்', ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான 'சஞ்சய்' ஆகியவை காட்சிப்படுத்த்தப்பட உள்ளன. அதோடு, T-90 குறிப்பாக T-90 பீஷ்மா வகை டேங்க், நாக் ஏவுகணை அமைப்பு, பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ஏவுகணை அமைப்பு, ஆகாஷ் ஆயுத அமைப்பு, ALH துருவ் எனப்படும் இலகுரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவையும் இன்றைய குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

