சிறுபான்மையினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திமுக அரசு 1 ரூபாய் கூட பயன்படுத்தவில்லை - வேலூர் இப்ராஹீம்
சிறுபாண்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திமுக அரசு ஒரு ரூபாய் கூட பயன்படுத்தவில்லை - பாஜக வேலூர் இப்ராஹீம் குற்றச்சாட்டு
![சிறுபான்மையினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திமுக அரசு 1 ரூபாய் கூட பயன்படுத்தவில்லை - வேலூர் இப்ராஹீம் DMK govt has not spent a single rupee to improve living standards of minorities BJP's Vellore Ibrahim alleges TNN சிறுபான்மையினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திமுக அரசு 1 ரூபாய் கூட பயன்படுத்தவில்லை - வேலூர் இப்ராஹீம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/7f79a2638d294dc26d8b1dd17c87f2ff1680357455644194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: மத அரசியலை பாஜக செய்யவில்லை என்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த 313 கோடி தமிழக அரசிடம் உள்ளதை ஒரு ரூபாய் கூட பயன்படுத்தாமல் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளதாகவும் பாஜக வேலூர் இப்ராஹீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் எம்ஜி சாலையிலுள்ள பல்பொருள் அங்காடி கடையில் பணிபுரிந்த இப்ராஹீம் என்பவரை பெரியகாலனியை சார்ந்த வல்லரசு, ராஜகுமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் உயிரிழந்த இப்ராஹீம் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்த கொலையில் பின்னணியில் உள்ளவர்கள் மீது விசாரனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவை சார்ந்த சிறுபான்மையின நல தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் நேற்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த பாஜக சிறுபான்மையின தேசிய செயலாளர் இப்ராஹீம், தமிழக போதைக்கு அடிமையாகி கொண்டிருப்பதாகவும் ஆட்சி வந்தால் ஸ்டாலின் மது ஒழிப்பினை கொண்டு வருவோம் என்றும் முதல் கையெழுத்து சாராயத்தை ஒழிக்க போடுவோம் என்று கூறிவிட்டு சாராயத்தின் மூலம் வருகின்ற வருமானத்தின் மூலம்தான் ஆட்சியை ஸ்டாலின் நடத்துவது வெட்ககேடானது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுவினால் இஸ்ஸாமிய, இந்து சகோதரியின் தாலிகள் பறிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும், இதனை பற்றி கவலைபடாமல் ஊழல் செய்து கொள்ளையடிப்பதையே திமுக ஆட்சி செயல்படுவதாகவும், திமுக ஆட்சி என்றாலே போதை பொருள் புழக்கம் ரவுடிகள் அட்டகாசம், கூலிப்படைகள் எல்லை மீறிய நிலை தமிழகம் முழுவதும் நடைபெறுவதாகவும் இதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டுமென தெரிவித்தார். தமிழகத்தில் உளவு துறை தூங்கிகொண்டிருக்கிறதா அல்லது விழிப்போடு செயபடுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், ஒவ்வொரு முறையும் கூலிபடையும், திமுக ரவுடி கும்பலும் படுகொலை செய்த பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப சண்டை ,சொத்து தகராறு என்று திசை திருப்புவதாகவும், விழுப்புரத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் போதையின் அடிப்படையிலையே நடைபெறுவதாகவும் இதனால் மக்கள் அச்சப்பட்டு கொண்டு இருப்பதாக இப்ராஹீம் தெரிவித்தார்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதால் ஏன் திமுக ஆட்சியை கலைக்க மத்திய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், இஸ்ஸாமியர் ஒருவர் கொலை செய்யபட்ட நிலையில் ஜவஹிருல்லா, ஆளுர் ஷானவாஸ், திருமாவளவன் போன்றோர்கள் அமைதி காத்து இருக்கின்றனர். இஸ்ஸாமியர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இஸ்ஸாமிய அமைப்புகள் குரல் கொடுக்கவில்லை என்றும் சிறுபான்மையின மக்களுக்கு குரல் கொடுக்கு அரசாக பாஜக உள்ளதாக கூறினார். மத அரசியலை பாஜக செய்யவில்லை என்றும் சிறுபாண்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த 313 கோடி தமிழக அரசிடம் உள்ளதை ஒரு ரூபாய் கூட பயன்படுத்தாமல் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளதாக இப்ராஹீம் குற்றஞ்சாட்டினார். இது பொய்யாக இருந்தா தன்மீது வழக்கு போடுங்கள் எனவும் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு செலவு செய்யவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்ராஹீம் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)