மேலும் அறிய
Advertisement
ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டார்... ஆளுநரை திட்டி தீர்த்த சி.வி.சண்முகம்
திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு செயல்பட்டு கொண்டிருப்பதால் அந்த காட்சியை விரைவில் பார்க்கலாம் என சி.வி. சண்முகம்.
விழுப்புரம்: தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்து கும்மிடு போட்டதிலிருந்து குற்றம் குறை கண்டு பிடித்து கொண்டிருந்த ஆளுநர் தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசி கொண்டிருப்பதாகவும், இன்று திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு செயல்பட்டு கொண்டிருப்பதால் அந்த காட்சியை விரைவில் பார்க்கலாம் என சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா
அதிமுகவின் 53வது துவக்க ஆண்டினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சேலை, சட்டை போன்ற சட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த சி.வி.சண்முகம அதிமுக சீறும் சிறப்புமாக உள்ளதால் 2026ல் மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சூளுரைப்பதாகவும், ஜால்ரா அடிக்கும் அரசு தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிகொண்டார்
திராவிட மாடல் அரசு என்று சொல்லிகொண்டு பண்டாரம் பரதேசி என்று சொன்னவர்களோடு 'பண்டாரம் பரதேசியாக மாறி ஜால்ரா அடிக்கும்' அரசு தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது பிரதம மந்திரியை பார்த்து கும்மிடு போட்டாரோ அன்றையிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிகொண்டு குற்றம் குறை கண்டு பிடித்து கொண்டிருந்த ஆளுநர் தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசி கொண்டிருப்பதாகவும் இன்று திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவில் அந்த காட்சியை பார்க்கலாம் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion