மேலும் அறிய
Advertisement
Urban Local Body Election: கடலூரில் தை அமாவாசையான நேற்று மட்டும் 87 பேர் வேட்புமனுத்தாக்கல்
4 பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் அமாவாசை ஆன நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 87 வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28 முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது, வருகிற 4 ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் தீவிரமாகி வருகின்றனர். கூட்டணி கட்சியினரும் வார்டு ஒதுக்கீடு விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முடிவு பெற்று வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் நடக்கும் இந்த தேர்தலை பொட்டி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 152 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தலா 63 ஆண்-பெண் வாக்குச்சாவடி மையங்களும் 26 அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் 6 நகராட்சிகளிலும் 314 வாக்குச்சாவடி மையங்களும் 14 பேரூராட்சிகளில் 270 வாக்குச்சாவடி மையங்களும் என மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் மொத்தம் தலா 224 ஆண் பெண் வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள் மற்றும் 186 அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் என 726 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 726 வாக்குச்சாவடிகளில் 133 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டு அதற்கு கூடதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 4 பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் அமாவாசை ஆன நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 87 வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் கடலூர் மாநகராட்சியில் 10 பேரும், 6 நகராட்சிகளில் 32 பேரும் மற்றும் 14 பேரூராட்சிகளில் 49 பேரும் எனஇதில் இதுவரை பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 49 பேரும், நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு 32 பேரும், மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 10 என மொத்தம் இதுவரை 91 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion