மேலும் அறிய
கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி
கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்

கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்
உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஓமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது, அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது மேலும் ஞாயிற்று கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து, நோய் பரவல் வேகமெடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 587 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பின்னர் சற்று பாதிப்பு குறைந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 382 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இப்படி இருந்து வந்த சூழலில் மீண்டும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 419 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி கடந்த மாதம் முதல் உயிரிழப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவல் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் (51). இவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என வந்தது. இருப்பினும் கலெக்டருக்கு தொடர்ந்து காய்ச்சல், உடல் வலி இருந்ததால் நேற்று காலை மீண்டும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் பரிசோதனை முடிவு மாலையில் வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அறுன்மொழிதேவன், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் 10 க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion