மேலும் அறிய

விழுப்புரத்தில் பரபரப்பு.... அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்

விழுப்புரத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் நேற்று முன்தினம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த போது வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் தாக்கப்பட்டார். உடனே அம்மாணவர், அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தனது அண்ணனிடம் கூற, அவர் தனது நண்பர்கள் சிலருடன் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் சென்று அவர்களை தட்டிக்கேட்டு தாக்கினார். 

சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். உருட்டுக்கட்டையை கொண்டு தாக்குதல் நடத்தினர். பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் அம்மாணவர்களில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் உறவினர்களான ஜி.ஆர்.பி. தெரு, சேவியர் தெரு, தாமரைக்குளம் பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் உருட்டுக்கட்டை, இரும்புக்குழாய்களுடன் அப்பள்ளியின் அருகில் சென்று அவ்வழியாக வந்த மற்ற மாணவர்கள் மட்டுமின்றி சாலையில் சென்றவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இரு தரப்பு மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தகுந்த அறிவுரைகளை வழங்கினர். அதோடு மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை கடைபிடிக்குமாறு ஆசிரியர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இதே போல் திண்டிவனம் அருகே உள்ள வேப்பேரி அரசு பள்ளி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பிரம்மதேசம் காவல் துறையினர் மாணவர்களின் வாகனகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் -  CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் - CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
The GOAT: ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் -  CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் - CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
The GOAT: ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!
HBD Devayani: கடைசி வரை நோ! சூர்யவம்சம் பாணியில் ராஜகுமாரனை திருமணம் செய்த தேவயானி!
HBD Devayani: கடைசி வரை நோ! சூர்யவம்சம் பாணியில் ராஜகுமாரனை திருமணம் செய்த தேவயானி!
Rasipalan: மிதுனத்துக்கு ஜெயம், கடகத்துக்கு கனிவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மிதுனத்துக்கு ஜெயம், கடகத்துக்கு கனிவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
Embed widget