மேலும் அறிய
Advertisement
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு - ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க கோரிக்கை
’’விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம், வீடுகள் இழந்தவர்களுக்கு 50 ஆயிரம், மழை நீர் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் வழங்க கோரிக்கை’’
கடலூரில் மழை வெள்ள பாதிக்கப்புகளை உள்ததுறை இனை செயலர் ராஜுஷர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு, எம்எல்ஏ மற்றும் விவசயாகள் மனு*
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19 ஆம்தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடி கடலூர் வங்க கடலில் சங்கமித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது மேலும் சுமார் 5500 ஹெக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதில் கடலூர், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்புகள், விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சில கிராமங்கள் தீவுகளாகவே மாறியது. இதனை தமிழக அரசு ஏற்கனவே கணக்கெடுக்கும் பணிகள் நடத்தி வரும் நிலையில் மத்திய குழுவினர் கடலூர் வருகை தந்து உள்ளனர், உள்துறை இனை செயலர் ராஜுஷர்மா மத்திய வேளான்துறை இயக்குநர் விஜய்ராஜ்மோகன் மத்திய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரன்ஜன்சிங் மத்திய ஊரகவளர்சசிதுறை செயலாளர் வரபிரசாத் ஆகியோர் தலைமையில், கடலூர் பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும். மேலும் அங்கு அதிகாரிகளால் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டனர்.
மத்திய குழுவிற்ககு மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம் பாதிப்புகள் குறித்து விளக்கினார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த பூவாளை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், மழை நீரால் சூழ்ந்த விவசாய நிலங்களை பாதிக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பார்வையிட உள்ளனர். கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு உள்ளனர் மேலும் பல சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது இதனால் உடனடியாக கடலூர் மாவட்டத்தை நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியினை உயர்ததி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மத்திய குழுவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், வீடுகள் இழந்தவர்களுக்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும், மேலும் மழை நீர் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பின்னர் கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion