மேலும் அறிய

வந்தவுடன் வேலையில் இறங்கிய அண்ணாமலை.. விழுப்புரத்தில் பரபரப்பு பிரஸ் மீட் - என்ன பேசினார்?

மரக்காணம் பகுதியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி தாக்கிய புயல் மற்றும் கனமழையால் இப்பகுதியில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் உப்பளத் தொழிலாளர்கள் மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மரக்காணம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய உப்பளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாமலை ஆய்வு

அப்போது அங்கிருந்த உப்பள தொழிலாளர்கள் ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில் உப்பளங்களில் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் ஆண்டுதோறும் ஆறு மாதம் மட்டுமே எங்களுக்கு வேலை கிடைக்கிறது. மற்ற ஆறு மாதத்தில் நாங்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

அதற்கு அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இதனைத் தொடர்ந்து மரக்காணம் அருகே ஆத்திகுப்பம் பகுதியில் பக்கிங் காங் கால்வாய் ஓரம் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அனுமந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குறவர் பொதுமக்களுக்கு பாய் தலையணை போர்வை பிரட் உள்ளிட்ட தொகுப்புகளை அட்டைப்பெட்டியுடன் வழங்கினார். 

செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் உப்பு அலங்கல் இறால் பண்ணைகள் விவசாய பயிர்கள் அதிகாலையில் பதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல இடங்களில் ஒரே நேரத்தில் 50 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் பாதிப்புகளும் உள்ளது. இதுபோல் மற்றும் சில இடங்களில் ஒரு ஆண்டுக்கு பெய்யக்கூடிய மழை ஒரு சில நாட்களில் பெய்துள்ளது. 

விழிப்புணர்வு செய்யவில்லை

இந்த கனமழையால் மரக்காணம் பகுதியில் உப்பு அலங்கல் இறால் பண்ணைகள் விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சாத்தனூர் அணையில் இருந்து திடீரென 1.68 லட்சம் கன அடி நீர் திடீரென்று திறக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு கூறுகிறது நாங்கள் புயல் தாக்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம் என, இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆனால் கிராமங்கள் தோறும் தொண்டோரா மூலம் இந்த விழிப்புணர்வை செய்யவில்லை. 

உரிய இழப்பீடு வழங்க வேண்டும் 

இது போன்ற வெள்ள பெருக்கிற்கு நீர் நிலைகள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட நீர் வழி இடங்களை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இந்த ஆக்கிரமிப்பால் பல ஓலைகள் குட்டை குளங்கள் காணாமல் போய்விட்டது. மேலும் தமிழக அரசும் நீர்நிலை ஆதாரங்களை மழைக்காலத்திற்கு முன் முறையாக தூர் வராமல் பேச்சு அளவிற்கு மட்டுமே தூர் வாரியதாக கூறுகின்றனர். மேலும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் விலை நிலங்கள் கால்நடைகளை முறையாக கணப்பீடு செய்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தேவையில்லாமல் மத்திய அரசு பணம் தரவில்லை இதனால் எங்களுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என கூறி ஒதுக்க கூடாது. தற்பொழுது தமிழக அரசிடம்போதிய நிதி உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் ஆய்வுக் குழுவினர் வந்து பார்வையிடுவார்கள். மேலும் இந்த பாதிப்புகள் குறித்து நான் டெல்லிக்கு செல்லும் பொழுது மத்திய அரசிடம் இதுகுறித்து விளக்கம் அளிப்பேன் எனக் கூறினார். 

முறையாக தூர்வாரவில்லை

வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறுகளை முறையாக தூர் வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம். நாங்கள் இங்கு வந்ததன் நோக்கம், நிலைமை எப்படி உள்ளது என்பதை தெரிவிப்பது தான். மத்திய அரசிடம் பணம் கேட்டோம், தர வில்லை என்று பழிபோடுவார்கள்.

பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் ஒருவாரத்தில் மத்தியக் குழுவினர் வருவார்கள். இது ஒரு நடைமுறைதான். அவர்கள் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவார்கள். அதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு தொகை தரலாம். நிச்சயம் மத்திய அரசின் தரப்பில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். சாத்தனூர் அணை திறப்பின் போது, மாநில அரசு 5 முறை அலர்ட் கொடுத்து உள்ளோம் என்று கூறுகிறது. 1 மணிநேரம் முன்பு சொல்லி விட்டு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். மக்கள் எப்படி வெளியேற முடியும். 38 கிராமங்கள் மூழ்கிவிட்டன.

சுப்ரீம் கோர்ட் பார்த்துக் கொண்டிருக்கிறது 

சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே காரணம். அரசு இயந்திரம், குறிப்பாக மாநில அரசு சரியாக செயல்படவில்லை. இந்த எச்சரிக்கை என்பது துறைகளுக்குள்ளாக மட்டுமே தெரியபடுத்தி உள்ளனர். அதிகாலை 2 மணிக்கு அறிவிப்பு தந்ததால் மக்கள் வெளியேற முடியவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லிருக்கக்கூடிய முக்கியமான கருத்து. வெயில்ல வந்த உடனே மிகவும் வேகமாக செந்தில் பாலாஜிக்கு அமைச்சராகி இரண்டு இலாகாக்களை ஒதுக்கியுள்ளார். இவ எல்லாத்தையும் சுப்ரீம் கோர்ட் பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு அதிகாரத்தை அவர் வைத்துக் கொள்ளும் பொழுது சாட்சியத்தை அழிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி இந்த வழக்கை ஒதுக்கி வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  
இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Embed widget