Watch video: வழி தெரியாத வட இந்திய லாரி.. உரசியதில் உடைந்த பெரியார் சிலை.. விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதியதில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலை சேதம்
விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதியதில் பெரியார் சிலை உடைந்து விழுந்தது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனேவுக்கு கண்டெய்னர் லாரி விழுப்புரம் வழியாக நேற்றிரவு 11.50 மணியளவில் சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை மகாராஷ்டிராவை சேர்ந்த மகேந்திரா சாப்பலே,52, என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரியார் சிலை உடைந்து விழுந்தது#Periyar #abpnadu pic.twitter.com/3BxT8dnv1H
— SIVARANJITH (@Sivaranjithsiva) January 20, 2022">
லாரி, விழுப்புரம் காந்தி சிலை சிக்னல் வழியாக, சென்னை -திண்டிவனம் நெடுஞ்சாலையை அடைந்து சென்னை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் ட்ரைவருக்கு வழி தெரியாமல் ,வழி தவறி, காமராஜ் தெரு வழியாக லாரி ஒட்டி சென்றுள்ளார். அப்போது காமராஜ் சாலை நடுவே லாரியை திருப்ப முயற்சி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக அங்கு சாலையின் நடுவே உள்ள 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தை பெரியார் சிலை மீது லாரியின் பின்பக்கம் உரசியது.
விழுப்புரத்தில் கண்டைநேர் லாரி மோதி பெரியர் சலை உடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு#cctvfootage #villuppuram pic.twitter.com/enoLCIWEjT
— SIVARANJITH (@Sivaranjithsiva) January 20, 2022">
லாரி உராசியதில் இதில் சிலை அடியோடு பெயர்ந்து விழுந்தது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதனம் செய்து அனுப்பி வைத்தார். மேலும் அப்பகுயில் எந்த அசம்பவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#விழுப்புரம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலையை கண்டெய்னர் லாரி மோதி சேதம்@abpnadu pic.twitter.com/lIn7ZkwGQE
— SIVARANJITH (@Sivaranjithsiva) January 20, 2022">
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்