மேலும் அறிய

விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் அருகே பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்த தேவி சிற்பங்கள் கண்டுபிடிப்பு.

விழுப்புரம் அருகே விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்  திருவெண்ணெய் நல்லுார் தாலுகா மேல் தணியாலம்பட்டு கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் செங்குட்டுவன், ஆர்வலர் தமிழழகன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்த தேவி சிற்பங்கள் அங்கு கண்டறியப்பட்டன.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறியதாவது:- மேல் தணியாலம்பட்டு ஏரிக்கரையில் விஷ்ணு துர்கை கோவில் உள்ளது. கோவிலின் கருவறை பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக கொற்றவை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, எருமையின் தலைமீது கால்களை வைத்து, கம்பீரமாக நிற்கிறார்.

முன்னிரு கரங்களில், வலது கரம் சுருட்டிய பாம்பை பிடித்த நிலையிலும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. மற்ற 6 கரங்களில் சங்கு, சக்கரம், வில், வாள், மணி, கேடயம் காணப்படுகின்றன. இடது தோளுக்கு பின்னால், அம்புகளை வைப்பதற்கான அம்பறாத் துாணி காட்டப்பட்டுள்ளது. கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்கள் காணப்படுகின்றன.

கோவிலுக்கு வெளியே, சிறிய அளவிலான மாடத்தில் உள்ள ஒரு சிற்பத்தை, அப்பகுதி மக்கள் காளி என கருதி வணங்கி வருகின்றனர். ஆனால், அச்சிற்பம், ஜேஷ்டாதேவி என்றழைக்கப்படும் மூத்ததேவி. பெருத்த வயிறு, கனத்த மார்புகளுடன், கால்களை மடக்கி அமர்ந்த நிலையில், மூத்ததேவி காணப்படுகிறார்.

வலது கை தாமரை மலரை ஏந்தி, இடது கை தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. அருகில் மகன் மாந்தன், மகள் மாந்தி உள்ளனர். வலது மேற்புறத்தில் காக்கை உருவம் உள்ளது. இவ்விரு சிற்பங்களும், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் காலமான கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN weather Report:  7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Gaza Hamas Vs Israel: “ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
“ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Karthigai Month: பிறந்தது கார்த்திகை... அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!
Karthigai Month: பிறந்தது கார்த்திகை... அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Report:  7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Gaza Hamas Vs Israel: “ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
“ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Karthigai Month: பிறந்தது கார்த்திகை... அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!
Karthigai Month: பிறந்தது கார்த்திகை... அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
Delhi Bomb Blast: “டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
“டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கொட்டித் தீர்க்கும்! புதுச்சேரி, காரைக்காலில் என்ன நிலை?
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கொட்டித் தீர்க்கும்! புதுச்சேரி, காரைக்காலில் என்ன நிலை?
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
Embed widget