மேலும் அறிய

வேலூர் : வேகமாக நிரம்பிவரும் மோர்தானா அணை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி..

பொதுமக்களைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டைப்போல் சைனகுண்டா- மோர்தானா கூட்டுச் சாலை  பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்.

மோர்தானா அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் நீர் நிரம்பி வருவதால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் .

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.இதனால் வேலூர் மாவட்டத்தில் பல நீர்பிடிப்புப் பகுதிகள் வேகமாக  நிரம்பி வருகின்றன. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி தமிழகப் பகுதியில் மோர்தானா அணை அமைந்துள்ளது. இந்த அணை 11.5 மீட்டர் உயரமும்  261 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்ளளவும் கொண்டது.

வேலூர் : வேகமாக நிரம்பிவரும் மோர்தானா அணை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி..

ஆந்திர மாநிலம் எல்லையோர கிராமங்களிலும், மோர்தானா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் மோர்தானா அணைக்கு நீராதாரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் ,  சிறு தடுப்பணைகள், முக்கியமாக காலவபல்லி அணை உள்ளிட்டவை நிரம்பியுள்ளதாலும், மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பலமநேர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 250 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது

அணையின் உயரம் சுமார் 9 மீட்டர் எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு சுமார் 190 மில்லியன் கன அடியைத் தாண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலூர் : வேகமாக நிரம்பிவரும் மோர்தானா அணை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி..

தொடர்ந்து மழைபெய்து வந்தால், தண்ணீர் வரத்து அதிகரித்து சில தினங்களில் மோர்தானா அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்தானா அணை நிரம்பி வருவதாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி மோர்தானா அணை நிரம்பியது, சுமார் 8 மாத காலம் மோர்தானா அணை நிரம்பிய நிலையிலிருந்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மோர்தானா அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவு தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் : வேகமாக நிரம்பிவரும் மோர்தானா அணை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி..

மோர்தானா அணை நிரம்பி வருவதை அறிந்த குடியாத்தம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் நேற்று முதலே வரத் தொடங்கியுள்ளனர். பொதுமக்களைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டை போல் சைனகுண்டா- மோர்தானா கூட்டுச்சாலை  பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் எனவும், அணை நிரம்பிவருவதால் பொதுமக்கள் குறிப்பாகச் சிறுவர்களுக்கு  அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம்  தடுக்க  உள்ளூர் விவசாயிகளைத் தவிர தேவையின்றி வெளியூர் நபர்கள் மோர்தானா அணை செல்வதைத் தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget