மேலும் அறிய

நடத்தையில் சந்தேகம்: உணவில் விஷம் வைத்து 70 வயது கணவர் கொலை; உடன் உண்ட உறவினர் கவலை; 2வது மனைவி கைது!

இவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் பொழுதே , ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைந்து நிலத்தில் விழுந்துள்ளனர்.இதனைப் பார்த்த மற்ற விவசாயிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனை அனுப்பினர்.

அணைக்கட்டு அருகே , மனைவின்  நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து  கொடுமை செய்து வந்த 70 வயது  கணவனை , தீர்த்துக்கட்டும் எண்ணத்தில் அவரது இரண்டாவது மனைவி சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்  . 

அவர் அருந்திய மீதி உணவை சாப்பிட்ட  70 வயது முதியவரின் உறவினர் , ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா , ஒடுக்கத்தூர் அடுத்த அகரம்புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் சூரிமுத்து (வயது 70 ) விவசாயி , திருமணம் ஆன சில நாட்களிலே அவரது மனைவி இறந்த நிலையில் , சூரிமுத்து இதே பகுதியை சேர்ந்த நிர்மலா (45) என்பவரை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு 4 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றார் .

நடத்தையில் சந்தேகம்: உணவில் விஷம் வைத்து 70 வயது கணவர் கொலை; உடன் உண்ட உறவினர் கவலை; 2வது மனைவி கைது!

இந்த நிலையில் , சூரிமுத்துவிற்கு தனது இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது . இதனால் தொடர்ந்து நிர்மலாவை கொடுமை படுத்தி வந்துள்ளார் . மேலும் இதனால் சூரிமுத்து மற்றும் நிர்மலா இடையே அடிக்கடி வாக்குவாதமும் , தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது .

நேற்று காலை , சூரிமுத்துவிற்கும் , நிர்மலாவிற்கும் மீண்டும் தகராறு வெடித்துள்ளது . மனைவிடம் சண்டைபோட்டு சூரிமுத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு , அவருடைய விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார் . பின்னர் அவரது விவசாய நிலத்தில் அவரது உறவினர் காந்திராஜ் என்பவருடன் வேலை செய்து வந்துள்ளார் .

நடத்தையில் சந்தேகம்: உணவில் விஷம் வைத்து 70 வயது கணவர் கொலை; உடன் உண்ட உறவினர் கவலை; 2வது மனைவி கைது!

மதியம் ஒரு மணி அளவில் , சூரிமுத்துவிற்கு மதிய உணவு சமைத்து எடுத்துவந்து நிலத்தின் அருகே வைத்து விட்டு சென்றுள்ளார் நிர்மலா. நிர்மலா சமைத்து எடுத்து வந்த உணவை உட்கொண்டுள்ளார் சூரிமுத்து . மேலும் மீதம் இருந்த உணவை அவரது உறவினரான காந்திராஜூக்கும் பரிமாறியுள்ளார் .

உணவு அருந்தும் பொழுது ஏதோ  துர்நாற்றம் வீசுவதை உணர்த்த காந்திராஜ் உணவில் ஏதோ கலந்து இருப்பதாக தெரிவித்துள்ளார் . இவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும் பொழுதே , ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைந்து நிலத்தில் வீழ்ந்துள்ளனர் .

இதனைப் பார்த்த அங்கு இருந்த மற்ற விவசாயிகள் , இருவரையும் மீட்டு , மாதனுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் . அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் , சூரிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் , கவலைகிடமாகவுள்ள காந்திராஜ்க்கு உடனடியாக மேல்சிகிச்சை வழங்கவேண்டும் என்று தெரிவித்ததன்  பேரில் , காந்திராஜை , உடனடியாக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .

நடத்தையில் சந்தேகம்: உணவில் விஷம் வைத்து 70 வயது கணவர் கொலை; உடன் உண்ட உறவினர் கவலை; 2வது மனைவி கைது!

மேலும் காந்திராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் ,வேப்பங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சூரிமுத்துவின் இரண்டாவது மனைவி நிர்மலாவை , கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார் . மேலும் இறந்த சூரிமுத்துவின் உடலை , வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget