(Source: Poll of Polls)
Tiruvannamalai | திருவண்ணாமலைக்கு ஆன்மீக விசிட் மட்டுமில்ல.. ட்ரிப் ப்ளானும் போடலாம்.. இதைப் பாருங்க
சுற்றுலா பயணிகள, குறைந்த செலவில் சுற்றுலா செல்லவும், மன அமைதியும் பெறவும் திருவண்ணாமலை ஒரு நல்ல ஸ்பாட்
பொதுவாக லோக்கல் சுற்றுலா என்றதும், அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஊட்டியும் கொடைக்கானலும் கன்னியாகுமரியும்தான். தரும் நிம்மதி மகிழ்வைவிட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பலரால் அறியப்படாத சுற்றுலாதலங்கள் உங்கள் பார்வைக்கு இதோ..
ஊட்டியும், கொடைக்கானலும், மதுரையும், குமரியும் நல்ல சுற்றுலாதலங்கள்தான். ஆனால் அங்கு குவியும் கூட்டமும் வசதிக்குறைபாடுகளும் போக்குவரத்து அசதியும் கொஞ்சம் அதிகமதான். அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் அதிகமாக பார்க்காத இடங்களுக்கும் சுற்றுலா செல்ல முயற்சிக்கலாம். செலவும் கம்மியா வேணும், ஆனா டூரும் போகணும் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இங்க இடங்கள் இருக்கு.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை சார்ந்த, தொன்மம் சார்ந்த, வரலாற்று சிறப்புடைய, பண்பாட்டு சிறப்புடைய பல இடங்கள் உள்ளன. இவற்றைக் காண பணம், நேரம் இவற்றைத் தாண்டி நமக்கு மனது மட்டுமே போதும். நாம் செலவிடும் அனைத்து வார இறுதி நாட்களுமே நமக்கு போதாது இந்த இடங்களைக் காணவும், அனுபவிக்கவும். அவ்வளவு இடங்கள் உள்ளன.
திருவண்ணாமலையில் இருந்து போளுர் 25 கிலோமீட்டர் வழியாக ஜவ்வாது மலைக்குச் செல்லாம்
1. ஜவ்வாதுமலை அமிர்தி
2. ஜவ்வாதுமலை பீமன் அருவி
3. ஜவ்வாதுமலை, கோட்டைப்பகுதி
4. ஜவ்வாதுமலை – மேல்பட்டு மருதமரம்
5. ஜவ்வாதுலை – மேல்பட்டு – கீழ்பட்டு புதிய கற்காலப்பகுதி
6. ஜவ்வாதுமலை – மேல்பட்டு – புலிக்குத்திக் பட்டான் கல்பகுதி
7. ஜவ்வாதுமலை மேல்பட்டு – கண்ணாடி மாளிகை
8. ஜவ்வாதுமலை – கீழ்பட்டு அருவி
9. ஜவ்வாதுமலை – பண்டிரேவ் அருவி
கல்வராயன் மலை
1. கல்வராயன் மலை – ஆத்திப்பாடி அருவி
2. கல்வராயன் மலையடிவாரம்
3. பர்வதமலையடிவாரம், மலைக்கோயில்
4. பர்வதமலை சுற்றுப்பாதை, மண்டபங்கள், வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில்
5. மட்டமலை இராஜராஜன் பற்றிய கல்வெட்டு- தென்மாதிமங்கலம்
6. அத்திமூர் கோட்டை அல்லது பொத்தரை கோட்டை
7. பழையனூர் கோட்டை
8. படைவீடு பகுதிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொல்லியல் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள்
9. தா. வேளூர் – வேடியப்பன் கோயில்
10. தா. மோட்டூர் – தாய்தெய்வச் சிலை
11. சின்னியம்பேட்டை – சிற்பக்குளம்
12. எடத்தனூர் நாய் நடுகல்
13. சாத்தனூர் பிக்அப் டேம்
14. சாத்தனூர் டேம்
15. வீரணம் வேடியப்பன் கோயில், பொன்ராயர் கோயில்
16. தொண்டமானூர் - பாழடைந்த சிவன் கோயில்
17. கீழ்ராவந்தவாடி சிற்பக்குளம்
18. வந்தவாசி கோட்டை
19. தேசூர் கோட்டை, நடுகல்
20. கீழ்நமண்டி பெருங்கற்கால பகுதி
21. எச்சூர் பெருங்கற்காலப்பகுதி
பொழுதுபோக்கு பூங்கா மற்றும் அணைகள்
1. சாத்தனூர் அணை, தண்டாராம்பட்டு வட்டம்
2. மிருகண்டாநதி அணை, மேல்சோழங்குப்பம்,
3. குப்பநத்தம் அணை, செங்கம் வட்டம்
4. செண்பகத்தோப்பு அணை, படைவீடு
5. அலியாபாத் அணைக்கட்டு, படைவீடு
6. ஆரணி அணைக்கட்டு, கொழப்பலூர்
பழமையான கோயில்கள்
1. குடைவரைக்கோயில்கள்
2. ஆவூர் – சிறிய குடைவரை
3. சீயமங்கலம்- முதல் நடராஜர் சிற்பம் உள்ள குடைவரை
4. மாமண்டூர்- தமிழகத்தின் பெரிய குடைவரை
5. குரங்கணில்முட்டம்- கல்மண்டபம்
சமணக்கோயில்கள்
6.திருமலை – ஓவியம், கல்வெட்டு, கட்டடக்கலை
7.கரந்தை – கல்வெட்டு, கட்டடக்கலை, சிற்பங்கள்
8.பொன்னூர் – குன்று, பாதம், ஆராய்ச்சிக்கூடம்
9.பூண்டி அருகர் கோயில்
மலைக்கோயில்கள் அமைந்த இடங்கள்
- பர்வதமலை
- கோவிலூர் , ஜவ்வாதுமலை
- வெண்குன்றம் தவளகிரிமலை
- பொன்மலை, தேவிகாபுரம்
- பெருமாள் கோயில், போளுர்
- கோட்டை வரதர், படைவீடு
- திருமால்பாடி, அரங்கநாதர் கோயில்
- மாமண்டூர், சிவன், பைரவர்கோயில்
மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள்
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை, பெரியகோயில்
பெரியநாயகியம்மன், தேவிகாபுரம்
அம்மையப்பன், பெருமாள் கோயில், படைவீடு
அக்னீஸ்வரர்கோயில், தாமரைப்பாக்கம், செங்கம் வட்டம்
கரைகண்ட தலங்கள், 7
சப்த கைலாயம்- 7 கோயில்கள்
திருப்பனங்காடு- சிவன் கோயில், பாடல் பெற்ற தலம்
வேதபுரிஸ்வரர், செய்யாறு, - பாடல் பெற்ற தலம்
குரங்கணில் முட்டம் – கொய்யாமலர் நாதர் – பாடல் பெற்ற தலம்
நெடுங்குன்றம்- பெருமாள் கோயில், நெடுங்குன்றநாதர் கோயில்
மடம் – தாடகபுரிஸ்வரர் கோயில்
கூழமந்தல் – கற்றளி
பிரம்மதேசம் – மணற்கல் கோயில்
வேட்டவலம் – திருவக்திஸ்வரர் கோயில்
ஆவூர் திருவகத்தீஸ்வரர்கோயில்
செங்கம் ரிஷபேஷ்வரர் . – மலைபடுகடாம் கல்வெட்டு
செங்கம், பெருமாள் கோயில் – ஓவியக் கோயில்