மேலும் அறிய

வாக்களிக்க காத்திருந்த சுயேட்சை வேட்பாளர் மாரடைப்பால் மரணம்! மகாராஷ்டிரா தேர்தலில் அரங்கேறிய சோகம்! 

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்தபோது பீட் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவின் பீட் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வாக்குச் சாவடியில் மாரடைப்பால் உயிரிழந்தார்

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்தபோது பீட் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் இன்று 288 தொகுதிகளில் புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

பீட் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் பாலாசாகேப் ஷிண்டே. இவர் தனது வாக்கினை செலுத்த பீடில் உள்ள சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குப்பதிவு மையத்தில் காத்திருந்தார். அப்போது திடீரென அவர் தரையில் விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அவரை முதலில் பீடில் உள்ள காகு நானா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால், பின்னர் சத்ரபதி ஷம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் படி, தேர்தலின் போது வேட்பாளர் இறந்தால், சம்பந்தப்பட்ட இடத்தில் வாக்களிப்பதை பிரிவு 52 இன் கீழ் ஒத்திவைக்கலாம் எனத் தெரிவிக்கிறது. பீட் சட்டமன்ற தொகுதி ஒரு காலத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) கோட்டையாக இருந்தது. பிளவுக்குப் பிறகு, அஜித் பவார் கையில் உள்ளது. அது பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணியில் தற்போது உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 தேவைப்படும் நிலையில்,  பாஜக கூட்டணிக்கு 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget