மேலும் அறிய

Crime: திருவண்ணாமலை அருகே கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு - 2 பேரின் முகநூல் பதிவால் பயங்கர மோதல்

திருவண்ணாமலை அருகே பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு. முகநூல் வீடியோ பதிவால் பயங்கர மோதல்.

திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோவில். 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் பல்வேறு விசேஷ தினங்களில் சாமி வழிபாடு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். அதேபோல அதே கிராமத்தில் பட்டியலின வகுப்பு சார்ந்தவர்களுக்காக காளியம்மன் கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பட்டியல் இனத்தை சார்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே பட்டியலின வகுப்பை சேர்ந்த தங்கராசு சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், ஊர் கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு தங்கள் இன மக்களும் உள்ளே சென்று தரிசனம் செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக முகநூல் பக்கத்திலும் தங்கராசு பதிவிட்டுள்ளார்.

Crime: திருவண்ணாமலை அருகே கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு -   2 பேரின் முகநூல் பதிவால் பயங்கர மோதல்

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்ற சமூகத்தைச் சேர்ந்த செந்தமிழும் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் முகநூல் பக்கங்களில் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இருவரும் ஒரு கட்டத்தில் தங்கள் கிராமத்தில் பார்த்துக் கொள்ளலாம் என முகநூலில் பதிவிட்டு இருந்த நிலையில் நேற்று கிராமத்திற்கு வந்த தங்கராசு மற்றும் செந்தமிழ் ஆகிய 2 பேருக்கும் கிராமத்தின் மையப் பகுதியில் வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதனை அறிந்த ஊர் மக்கள் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபடாமல் இருப்பதற்காக தடுக்கும் சமயத்தில், இரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் பின்னர் கைகலப்பாகவும் மாறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Crime: திருவண்ணாமலை அருகே கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு -   2 பேரின் முகநூல் பதிவால் பயங்கர மோதல்

இதனை அறிந்த வேட்டவலம் காவல்துறையினர் பலத்த காவல் பாதுகாப்புடன் செல்லங்குப்பம் கிராமத்திற்கு வந்தனர். அப்போது, காவல் துறையினருடைய வாகனத்தை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைத்தனர். தற்பொழுது செல்லங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்குள் நுழைவது குறித்து இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் முகநூல் பக்கத்தில் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் தற்பொழுது ஒரே கிராமத்தில் இருவரும் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Embed widget