மேலும் அறிய

Fire Accident: பலரின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு நேர்ந்த சோகம்; தீ விபத்தில் மனைவி உயிரிழப்பு

ஆரணியில் தீயணைப்பு துறை அலுவலர் வீட்டில் சமையல் பம்பு ஸ்டவ்வில் மண்ணெண்ணெய் கசிந்து வெடித்ததில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

தீயணைப்பு துறை துணை அலுவலர் வீட்டில் ஸ்டவ் அடுப்பு வெடிப்பு 

திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரப்பகுதியில் உள்ள அருணகிரிசத்திரம் கண்ணப்பன் தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சரணவன் வயது (50). இவர் ஆரணியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு துறை துணை அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஜெயலட்சுமி வயது (48) என்ற மனைவியும் விக்னேஷ் ஜெகதீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அவரது மனைவி ஜெயலட்சுமி இருவரும் நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சரவணன் வீட்டில் ஆறு மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணெய் ஊற்றி வேகமாக பம்பு செய்துள்ளார். இதில் எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்துள்ளது. அந்த நேரத்தில் ஜெயலட்சுமி கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணெய் சிதறி கேஸ் தீயில் பட்டதில் ஜெயலட்சுமியின் புடவையில் தீ நன்றாக பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. ஜெயலட்சுமி அலறியுள்ளார். ஜெயலட்சமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தீயணைப்பு துறை துணை அலுவலர் சரவணன் மனைவியை காப்பாற்ற முயன்றார்.

மனைவி உயிரிழப்பு

சரவணன் உடையிலும் தீ பிடித்து மளமளவென எரிந்துள்ளது. சமையலறை மிகவும் சிறியது என்பதால் இருவராலும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற தீயணைப்பு துறை ஊழியர் தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சரவணனை பரிசோதனை செய்து மேல் சிகிச்சையாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் உடலை ஆரணி நகர காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சரவணன் உடன் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:

தீயணைப்பு நிலையத்தில் 27 ஆண்டுகளாக சரவணன் வேலையை செய்து வருகிறார். வீடு அல்லது கடையில் தீ விபத்து ஏற்படும்போது உயிரை பணயம் வைத்து சரவணன் தான் முதலில் உள்ளே சென்று விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவார். மிகவும் தைரியமானவர்.  அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. சரவணன் தனது பெரிய மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தங்களிடம் கூறியுள்ளார். திருமணத்துக்காக சமீபத்தில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்துள்ளார். சரவணன் விரைவில் குணமாகி வீடு திரும்பி மகன் திருமணத்தை பார்க்க வேண்டும் என்றனர்.

ஆரணியில் தீயணைப்பு துறையினர் வீட்டிலேயே தீ விபத்தில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget